உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 85 உடன்பிறப்பே, நமது கழகத்திற்கென்று தனித் தன்மை, இலட்சியம், கொள்கை, கோட்பாடு உண்டு! உன் ஆற்றலையும் ஓயாத உழைப்பையும் நம்பிச் சொல் கிறேன்; தேவைப்பட்டால் தனித்தே இயங்கிடும் வலிவும் உறுதியும் நமது கழகத்திற்கு உண்டு. அதற்காக யார் தோழமையும் தேவையில்லையென்று ஆணவத்துடன் அறிவிக்கும் அரசியல் அநாகரீகமும் நமக்குக் கிடையாது. துணையின்றித் தனி வழிதான் செல்லவேண்டுமென ஆகிவிட்டால், துணிவுடன் நமது பயணத்தைத் தொய் வின்றித் தொடர்வோம். புயலில் பொருள்கள் இடம் மாறுவதுபோல அரசியல் திருப்பங்களில் இன்று தோழமையுடன் விளங்கும் கட்சிகள், நாளைக்குப் பகை கக்கும் கட்சிகளாகிவிடலாம். இன்று எதிர் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் நாளைய தினம் இணைந்து செயல்படும் கட்சிகளாக மாறலாம்! வான மண்டலத்துக் கிரகங்களின் மாற்றத்தைச் சுலபத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அரசியல் வரலாற் றில், கட்சிகளுக்கிடையே எழும் உறவு மாற்றங்களை அறுதியிட்டு யாராலும் கூற முடியாது! எனவேதான், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தோடு ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சிப்பது நல்லது என்று நம் கட்சி உட்பட எல்லாக் கட்சிகளுக்கும் கூறிக்கொள்ள விரும்பு கிறேன். அன்புள்ள, மு.க 31-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/99&oldid=1695507" இலிருந்து மீள்விக்கப்பட்டது