உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஈன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டுப் படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்ததைக் கூற வேண்டுமா? ஷாஜகா னின் குணாதிசயங்களை ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டுமா? நாசர் காலமா? சீசர் வீரமா? எல்லாமே அவனுக்கு மனப்பாடம்! சுருங்கச் சொன்னால் அவனே ஒரு சரித்திரப் புத்தகம்! இலக்கியத்திலே எதுபற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும்? எதற்கும் தயார்! கவிதைத் துறையிலே கம்பனா? ஷெல்லியா? காளிதாசனா? டென்னிசனா? பைரனா? பாரதியா? யாரைப் பற்றியும் கருத்துரைகள் வழங்குவதிலே அவனுக்கு நிகர் யாருமில்லை என்பது மட்டுமல்ல ; அந்தக் கவிதா மண்டலத்தோடு போட்டியிடவும் திறமை பெற்றவன். பொருளாதாரம் பற்றி விளக்கம் தேவையா? காரல்மார்க்ஸ் அனுப்பிவைத்த தூதுபோலத் தொடங்கி விடுவான், பொருளாதாரப் பிரசங்கத்தை. அமெரிக் காவின் ஆஸ்தி என்ன? ரஷ்யாவின் ரகசியமென்ன? இது போன்ற விவரங்களை ற மிக எளிதில் கற்றுத்தர வல்லோன்! கணிதத்திலோ மேதை ! பூகோளத்துப் புலி! அரசியலிலே அவனோர் பிளேட்டோ! சமுதாயத்திலே சாக்ரட்டீஸ்! எழுத்திலே பெர்னாட்ஷா-ஷேக்ஸ்பியர் இருவரின் கூட்டு! பேச்சிலே டெமாஸ்தனிஸ்-இங்கர்சால் இருவரின் கலப்பு! இத்தகைய மேதை ! புதிய பாதை வகுத்தவன்! அவனது பெயர் கூறவே