உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனங்குலை 119 வேலன் சுருண்டு வீழ்ந்தான். கமலம் வேலனைக் கவனிக்க ஓடினாள். முரடன் அங்கு கிடந்த பனங்குலைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு, “குட்டி ஆசைக்குப் பயல் பனங்காய் திருடு கிறானா? ? அதுவும் என்கிட்ட?” என்று கேலி செய்தவாறு அதை விட்டு நடந்தான். நடந்தவன் நின்றான். கமலத்தின் பரபரப்பைக் கவனித்தான். அங்குமிங்கும் ஓடி அவள் வேலனின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும், முன்தானையால் விசிறுவதையும் கண்டான். முரடன் முகத்தில் சபலக் குறி தலை காட்டியது. கமலத்திடம் திரும்பி வந்தான். 66 இந்தா குட்டி! பனங்காய் வேணும்னா, என்னைக் கேட்டா தரமாட்டேன்? இந்த மாதிரிப் பயலுகளை நம்பலாமா? இந்தா எல்லாத்தியும் வச்சுக்க! உனக்கு ஏன் இள வயசிலே இந்த வியாபாரம்! என்னைக் கேட்டிருந்தா நம்ப நாடகக் கம்பெனியிலே அயர்ன் ஸ்த்ரீ பார்ட்டா ஆக்கியிருப்பேனே...' என்றவாறு முரடன் பல் இளித்தான். அதை " சபாவின் "சரிதான் போய்யா, வேலையைப் பார்த்துகிட்டு!” என்ற வாறு வேலனைக் கவனிப்பதில் ஈடுபட்டாள் முழுமூச்சாக கமலம். முரடன் தலையை அசைத்தவாறு ஏதோ முடிவுடன் மோகனகான விட்டகன்றான். முருகானந்த உரிமையாளர் மோதக விநாயகம்பிள்ளைதான் அந்த முரட்டு மனிதன் என்பது கமலத்துக்குத் தெரியாமல் இல்லை. தெரியாமல் இல்லை. அவர் ஊர் சொத்தைத் திருடி வாயில் போட்டுக் கொள்ளும் பெருச்சாளி என்பதும் அவளுக்குத் தெரியும். புறம்போக்கு நிலத்தில் உள்ள பனை மரங்களுக்கு அவரே பாத்யதை கொண்டாடி வருகிறார் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். விரைவில் கமலத் துக்கும் தானே பாத்யதை கொண்டாடப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அடிபட்டு வீழ்ந்த வேலனுக்கு மயக்கம் தெளிந்ததும் அவனைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றாள் கமலம். தேவை யான சிகிச்சைகளுக்குப் பிறகு, அவன் அவளுக்கு நன்றி தெரி வித்துவிட்டுப் புறப்படும்போது கமலம் விடையளிக்க மறுத்து விட்டாள். அவனும் காரணம் புரிந்து கொண்டான். இருவரும் தங்கள் பிறப்பு வளர்ப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். இருவருமே அனாதைகளாய்ச் சந்தித்தார்கள். இருவரையும் விட்டு அனாதைப் பட்டம் ஓடிவிட்டது. ஆரத் தழுவினர்; ஆனந்தங் கொண்டனர். அன்றைய இரவு இன்ப கீதம் பாடி, மெல்ல மெல்ல