உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வச்சிருந்தேன் ! கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் எல்லாத்தையும் ஒரே அடியில் உடைச்சு எறிஞ்சுட்டாயே !” •செல்லாயி ! நீ சாக்கடையில் மிதக்கிற புழுவை விடக் கேவலமானவள். ஆடம்பரத்திலே மயங்கி, ஆடம்பரத்திலே மயங்கி, அறிவைக் கொலை செய்துகொண்ட அற்பமான விட்டில் விட்டில் பூச்சி நீ ! ஒரு விஷயம் தெரிஞ்சுகிட்டேன். பொம்பளைகள் குரங்கு மனசாலும் கெடுவ துண்டு. எல்லாத்துக்கும் சமுதாயம் பொறுப்பாக முடியவே முடியாது. 60 " பேச்சால் என்னைக் குத்திக் குடைய வேணும்னா என்னைக் கொன்னு போடுங்க. 66 " வேண்டாம்; கோவிந்தன் ஒரு கொலை கொல்லத்தான் போகிறேன். நாளைக்குக் முகத்திலே ஒரு கோசா' வாக முழிக்கமாட்டேன். காரனாகத்தான் தரிசனம் கொடுப்பேன். செல்லாயி நீ செத்தால் நானும் சாவேன் என்று எத்தனையோ தடவை, இந்தப் படுக்கையி லேயே சொல்லியிருக்கேன். இப்ப உன்னைச் சாக அடித்துவிட்டு நான் வாழப்போகிறேன். " பேச்சு முடிவதற்குள் எல்லப்பன் பாய்ந்தான். " ஆ அய்யோ......ஹ்.....ஹ் ' செல்லாயி சுருண்டு கீழே விழுந்தாள். அவள் தொண்டைக் குழியில் அழுத்தியிருந்த பெருவிரலை எல்லப்பன் எடுத்தான். செல்லாயியின் சவம் சுடலையில்! எல்லப்பன் கையால் தீ மூட்டப்பட்டது. தங்கமான பெண். தெருவின் ஒப்பாரி. தணலாகப் போகிறாள்" “தங்கமல்ல. மெருகு பூசிய மட்டப் பித்தளை' எல்லப்பனின் இதய இடிகள் ! செல்லாயி எரிந்தாள். 66 6 'முன்னையிட்டதீ முப்புரத்திலே ! பின்னையிட்டதீ தென்னிலங்கையிலே ! என்மனைவியிட்ட தீ மங்காத மானத்திலே! யானுமிட்ட தீ விபசாரக் கோட்டையில் மூள்க மூள்கவே !" எல்லப்பன் பாடவில்லை. செத்தவள் கதை'க்கு அவன் மனத்தில் அலை மோதிய 'மங்களம் ' இது.