உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் படி வழுக்கப் போறது; மெதுவா ஏறுங்க... குளத்தில் இறங்கியிருந்த ஆட்களிடம் கரையில் நின்ற கும்பல் இப்படி எச்சரிக்கை செய்துகொண்டு இருந்தது. 66 சண்டாளனைக் கோயிலில் விடுகிறதுன்னா சாமிக்கே அடுக்கவில்லை...சகுனத்தடை ஏற்பட்டு விட்டது இப்படி ஒருவர் பீடிகை போட்டுப் பிரசங்கம் செய்தார். "❝ தலைமுறை தலைமுறையாய்க் காணாத பழக்கம். இந்த அக்கிரமத்தை ஆண்டவன் சகிப்பாரா? திருக்குளத்தையே தீட்டாக்கி விட்டாரப்பா - மற்றுமிருவரின் இவ்விதம். «« உரையாடல் போயும் போயும் இன்னைக்கா விழுந்து சாகணும்? அடப் பரிதாபமே'- ஒரு இரக்க ஜீவன் இப்படிப் பேசிற்று. 66 66 கர்ப்பவதியப்பா ' ஒரு கிழவி அனுதாபப்பட்டாள். இரண்டு ஆத்மா. இன்னைக்குக் கங்காதேவி ஆட் கொண்டாள் ஒரு ஆத்ம ஞானியின் சொற்பொழிவு இது ! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கருப்பாயி யின் பிரேதம் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. போலீசார் பிரேதத்தைப் பார்வையிட்டனர். பிரேத விசாரணைக்கு ஏற்பா டாயிற்று. எந்த ஆஸ்பத்திரியில் பறைச்சிக்கு இடமில்லையென்று முதல் நாளிரவு விரட்டியடித்தார்களோ, அதே ஆஸ்பத்திரியில் அந்தப் பறைச்சியின் பிரேதம் தாராளமாக அனுமதிக்கப்பட்டது. பிச்சுமூர்த்தி பிரேத விசாரணைக்கு உதவியாகத் தன் வேலை யைத் தொடங்கினார். அவருக்கும் அவருடைய கம்பவுண்டருக்கும் கருப்பாயி இறந்த காரணம் ?... ஊர் கூறிற்று கடவுளின் திருவிளையாடல் என்று! டாக்டர் நடித்தார் காரணம் கண்டுபிடிப்பதாக! உலகத்துக்குத் தெரியுமா; சமுதாய அமைப்பிலே, நாட்டு நடப்பிலே உள்ள கோளாறு நஞ்சாக மாறிக் கருப்பாயியைக் கொன்று விட்டது என் ற உண்மை? யாருக்குத் தெரியும்? அது தெரிந்தால்தானே பிரேத விசாரணையில் வெற்றியடைந்ததாக அர்த்தம்?