உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் கலர்ப்புறாவின் செயல்தானே ; கலர்ப்புறா இங்கு வராமலிருந்தால் இந்தப் புதுத் தொல்லை வராதே என்று வெண்புறா வருத்தப் பட்டது. அதற்குள் கலர்ப்புறா, கரும்புறாவைத் தனியே அழைத்துச் சென்று ஏதோ பேசியது. இரண்டும் சேர்ந்து வேடனை விரட்டுவது என்று திடீரெனத் திட்டம் தீட்டின. பிறகு கலர்ப் புறா, வெண்புறாவிடம் ஓடிவந்து—“ வேடனை விரட்ட நீயும் வா !" என்று கூப்பிட்டது, " " வேடனை வெற்றிகொள்ள நான் வருகிறேன். நீ பிறகு வல்லூறை விரட்டிவிட்டு, ஆலமரத்தைப் புறாக்களின் தனி மாளிகையாக்கும் முயற்சியில் ஒத்துழைப்பாயா? என் று வெண் புறா கலர்ப்புறாவிடம் ஒரு நிபந்தனை போட்டது. கலர்ப்புறா அதற்கு இணங்கவில்லை. மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்த வேடன், புறாக்கள் கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான். அந்தப் புறாக்களிடமே சொல்லிக் கலர்ப்புறாவைத் தான் பிடித்துக்கொள்ளலாம் என்று கருதிப் புறாக்களைப் பார்த்து ஓட்டு ; ஓட்டு கலர்ப்புறாவை என்று கத்தினான். 66 று " இறுதியாக வேடன் மரத்திலேறிக் கலர்ப்புறாவை உயிரோடு பிடிக்கத் திட்டம் போட்டு, ஏற ஆரம்பித்தான். கலர்ப்புறாவோ பறந்து சென்றால் வேடன் கணைக்கு இறையாவோம் என அஞ்சி, கரும்புறாவின் துணையோடும் வேடனை திர்க்கக் கிளம்பியது. நேரத்திலும் வெண்புறாவுக்குக் கலர்ப்புறா அழைப்பு கடைசி விடுத்தது. " "உன் காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்ள முடியாது ; நம் காரியமென்ன ? ” என் என்று கேட்டது வெண்புறா. உடனே கரும்புறா, வெண்புறாவிடம், விட்டது ; வேடனை விட்டால் நம்மையெல்லாம் கொன்று விடுவானே என்று உபதேசம் செய்தது. அது ஏதோ ஆனது ஆ ஆகி கேட்ட வெண்புறா “வேடனை எனக்கு வீழ்த்தத் தெரியும். அதற்காகக் கலர்ப்புறாவின் துணை எனக்குத் தேவை யில்லை என்று கூறிவிட்டது கம்பீரமாக! " கரும்புறா வெண்புறாவைக் கோபித்துக்கொண்டது. கங்காணி என்றது. வெண்புறா அதற்காக அயரவில்லை.