உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் விரைவிலே திரும்பிவந்து விவாகம் செய்து கொள்ளவில்லை என்ற ஒரு தவறைத் தவிர நான் வேறென்ன தவறு செய்தேன்? விரைவில் வெற்றி வீரனாக வருகிறேன் ! பதில்-பதில். அன்புக்கு அடிமை, சுந்தர் பாபு' 99 நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்தான் பாலன். அப்போதுதான் தெரிந்தது அவன் என் பின்னால் மறைந்திருந்து கடிதம் முழுவதையும் படித்திருக்கிறான் என்று! கடிதம் காதல் விவகாரங்களில் ஈடுபடும் போதாகட்டும்; காதல் எழுதும் போதாகட்டும்; காதலியின்பால் கண்ணை வீசும்போதாகட்டும் பக்கத்தில் யார் இருந்து நம்மை கவனிக்கிறார் களோ என்ற பயமே மனிதனுக்கு ஏற்படுவது கிடையாதே ! சும்மாவா சொன்னார்கள் காதலுக்குக் கண்ணில்லை என்று ! அது என் விஷயத்தில் உண்மையாகத்தான் முடிந்துவிட்டது. என்னை யறியாமல், பாலன் கடிதத்தைப் படித்ததுமட்டுமல்ல நான் குறிப் பிடுவது; என் காதல் மாளிகையின் அஸ்திவாரமே குருட்டுக் கொத்தனாரால் அமைக்கப்பட்ட போலி அஸ்திவாரமாகத்தான் முடிந்துவிட்டது! அப்போதே சொன்னான் பாலன்; அடிக்கடி கடிதம் எழுதாதே, கசந்துவிடும் என்று! கைவலிக்க வலிக்க எழுதினேன். கருத்து இனிக்கப் படிப்பாள் என்று நம்பினேன். ஆனால் நம்பிக்கை நாசமாயிற்று. உலகத்தை நிலை கலக்கிய போர் முடிந்துவிட்டது-ஆனால் என் உள்ளத்தை நிலை கலக்கிய போர் முடிவடையவில்லை. று 66 ஆயிரம் மடல். அதற்கு பதில் எழுதவில்லை. பாலன் சொன்ன சமாதானங்கள் எதுவும் என் காதிலே ஏறவில்லை. யுத்தச் செய்திகள் யாருக்கப்பா சரியாகக் கிடைக்கிறது? எங்கேயோ ஒரு மூலையில் இந்தியாவிலே குடியிருக்கும் உன் காதலியின் குடும்பத் தார் யுத்த வெறியினால் எப்படி பாதிக்கப்பட்டார்களோ ; யார் கண்டது? சுதேஷாவின் மீது வீணாக ஆத்திரப்படாதே ! நேரில் சென்று உண்மை நிலையை அறியணும்” என்று பாலன் அடிக்கடி கூறினான். அவனது ஆறுதலால் உயிர் வாழ்ந்தேன். அவன் கூறியது உண்மைதான் என்பது போல அவளுக்கு நான் கடைசி யாக எழுதிய கடிதங்கள் எல்லாம் எனக்கே திரும்பிவர ஆரம்