உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 காண்டன. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் காலையில் சொந்தக்காரர்கள் உயிரோடிருந்தால் எலும்பு அள்ளிக் கொட்ட அங்கே வருவார்கள். அதற்குள் ஆறு அந்த வேலையைச் செய்தாலும் செய்துவிடும். பெரு மூச்சு விட்டபடி மீண்டும் ஓட்டப் பயணத்தைத் தொடர்ந்தான் பக்தன். எதிரே சில தீவட்டிகள். பாடையல்ல! நீண்ட கழியில் ஒரு துணி ஏணை ; அதிலே ஒரு குழந்தை. விழிக்காத நித்திரை. கொள்ளிச்சட்டி கிடையாது. மண்வெட்டிகள் தூக்கி வந்தார்கள் சிலர். புதைக் கும் பிணம் போலும்! பக்தன் முன்னிலும் பன்மடங்கு வேகமாக ஓட ஆரம்பித்தான். காலிலே கருவேல் முட்கள் தைத்துக் அதையும் அவன் கவனிக்கவில்லை. கரையோர முள்ள தாழை மடல்களிலே அவன் முகம் உராய்ந்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. பழனிக்குப் பால் காவடி எடுப்பவனின் உடலிலே காணப்படும் அலகுகள் போலச் சிலாகைகள் போல அவன் உடலெங்கும் முட்கள் நீட்டிக்கொண்டிருந்தன. எதிரே யுள்ள பாழுங்கிணற்றை எப்படித்தான் தாண்டினானோ தெரியாது. பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றமளிக்கும் பாவாடைராயன், காத்தவராயன் கோயில்களை எப்படித்தான் கடந்தானோ அவனுக்கே தெரியாது ! ஊர்க்கோடிக்கு வந்து சேர்ந்தான். அதோ ஒரு கோயில். சுற்றிலும் காடு. உள்ளே அந்த ஆலயம் ! அம்மா! தாயே !! எனக் கத்தினான். ஆவேசம் வந்தது போல் ஓடினான். கதவு பூட்டியிருந்தது. மதிற்சுவரின் மீது தாவினான். அடுத்த பக்கம் குதித்தான். எதிரே காளிகா தேவியின் உக்கிர உருவம். உறுமும் சிங்கம்-உதிரம் கொட்டும் தலை எல்லாம் சிலைவடிவில்தான்! அதனால் பக்தன் அச்சமின்றி அம்மையின் அருகே சென்றான். "பத்ரகாளி? மகாதேவி !! மகிஷாசுர மர்த்தனி!!! என்று கூவினான். 66 மான " " று "யார் அது?" காளி கேட்டாள். " 66 என்னைத் தெரியவில்லையா?" என்று கதறினான் பக்தன். தெரியவில்லை...சொல்!' “நான் தான் உன் பக்தன் காளிதாசன்!' 66 'எந்தக் காளிதாசன்? நாக்கிலே எழுதி நாவலனாக ஆக்கி னேனே ; அந்தக்காளிதாசனா?" 66 'இல்லை தாயே...நான் அவனில்லை! நான் இயற்கையிலேயே கொஞ்சம் புத்திசாலி! ஆனாலும் உன் பக்தன்!” 66 சரி போகட்டும்-பக்தா! என்ன வேண்டும் உனக்கு?