உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழமுடியாதவர்கள் 66 165 என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை?” சினிமாப் பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது. 66 பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார் ஒருவர் இப்படி அனுதாபப்பட்டார். 66 “ புராணக் கதையை...... அப்படியே எடுத்திருக்கான்.' பிரம்மா ... மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிருஷ்டித்தார் அவளையே அவர் காதலிப்பதென்றால்... சேச்சே!...அபத்தம்!!” திலோத்தமையை ! தகப்பன் மகளை ... சேச்சே !... பொறுங்கள், வாந்தியெடுத்து விடாதீர்கள் ' கிண்டல் காரன் பேச்சை முடித்தான் இவ்விதமாக. திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும்-சிதறியும்-வர வரக் குறைந்தும்-தேய்ந்துங் கொண்டிருந்தது. பொன்வண்டுகள் அந்த நடக்கும் ..பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. வேடர் ' களும் வேறு பக்கம் திரும்பினர். காலேஜ் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமம் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும் காந்தாவும் வந்துகொண்டிருந்தார்கள். காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடி யிருந்தன. உம்...... பார்த்து நட!” சின்னச்சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரர். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு. வாட்ட மற்ற நடை. வாட்ட மற்ற நடை. திரண்டுஉருண்ட தோள்கள்.நிமிர்ந்த நெஞ்சு. கம்பீரமான தோற்றம். கண்களிலே எப்போதும் சிவப்பு நிறம். கறுப்புக் குலையாத மீசைகள். காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின் தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நட மாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகை யடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப் புறமாகச் சிறிது தூரம் சென்றால், 'போலீஸ் லைன்.' அங்கே 18-வது எண்ணுள்ள வீடு சின்னச்சாமியுடையது. « காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி பொட்டு இருக்கும்."