உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாக்ய சிந்தாமணி 175 அழுத்தமாக ஊன்றித் தப்பி விடலாமென்று நினைக்கக்கூட நேர மிருக்காதே! அதற்குள் குளத்தின் அடித் தளத்திற்கல்லவா போய்ச் சேரவேண்டும். அதவும் என்னைப்போல நீந்தத் தெரியா தவர்கள் கதி ? சமுதாயத்தின் பாசி படிந்த பாழுங்குளத்திலே சருக்கி விழுந்தேன். நாயைக் குளிப்பாட்டி நடுக்கூடத்தில் சேர்க்கலாமா என்று வசைமாரி பொழிந்தபடி, பெரிய மனிதர், என்னை வீட்டைவிட்டுத் துரத்தினார். தாயாரின் வேலையை மேற் கொண்டேன். பிச்சை எடுத்தேன் என் வயிற்றுக்கு! பிச்சையும் கொடுத்தேன் வாலிபர்களின் வெறிச் செயலுக்கு! இப்படி நகர்ந்த என் வாழ்விலேதான்- நட்சத்திரமே, நீ உதயமானாய் ! நீயும் என்னைப்போல ஆகிவிடாமல் உன் பாட்டியைப் போலக் கௌரவ மாக மானத்தோடு வாழம்மா !” என்று மரண முகப்பிலே அனுபவ சுருதியோடு கலந்த சோக கீதத்தை இசைத்துவிட்டு, மங்களம் பாடித் தன் கச்சேரியை முடித்துக்கொண்டாள் சிந்தாமணியின் தாய்! 66 66 தாயுமற்ற அனாதையாகிவிட்ட சிந்தாமணி பிச்சைக்காரச் சிறுமியாகச் சில நாள் அலைந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு அதிர்ஷ்டம் " அடித்தது. அனாதைச் சிறுவர்களைப் பாதுகாத்துக் கல்வி வழங்கும் ராமலிங்கசாமி குருகுலத்திலே அவளுக்கும் ஒரு இடம் கிடைத்தது. அந்தக் குருகுலத்தின் பிரதம ஆசிரியர் பழுத்த ராமலிங்க பக்தர். ராமலிங்க சிவானந்தம் என்பது அவரது பெயர். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். ராமலிங்க ருடைய அருட்பாக்கள் அவருக்கு மனப்பாடம். தேவார, திரு வாசகங்களில் அவர் அவர் புலி. எம்மதமும் சம்மதமே-தென்னா டுடைய சிவனே போற்றி!" என்ற வார்த்தைகளை அவர் முணு முணுக்காத நேரமே கிடையாது. அவரது பார்வையிலே பட்ட அனாதைச் சிறுமியை அவர்தான் குருகுலத்தில் கொண்டுவந்து சேர்த்தார். சிந்தாமணியும் நன்கு கல்வி பயின்று தேர்ச்சி பெற்றாள். சிவானந்தரின் மூத்த மகன், ஜோதியானந்தம் மேல் நாட்டுப் படிப்புப் படிப்பதற்காக அமெரிக்கா போயிருந்தான். அவன் படிப்பை முடித்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான். அவனது கருத்தைக் கிளறும் சந்திப்பு ஒன்று குருகுலத்திலே நிகழ்ந் தது. அதுதான், சிந்தாமணியின் சந்திப்பு! சிந்தாமணி-ஜோதி யானந்தம் இருவரும் காதலராயினர். அந்தக் காதல் கட்டத்தை வர்ணிக்க வேண்டுமா என்ன? அந்தக் கட்டங்களைக் கண்டுகண்டு, கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிருக்கும் உங்களிடம், அதை