உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் பாவம்! சூதாட்டம் போலன்றி, மாசுமருவின்றித் துவங்கிய அந்த எதிர்காலம் ஏக்ககாலமாக மாறும் என்பதை அவர்கள் மாணவப் பருவம் உணர்த்தவே இல்லை ! . விட்டு சந்தர்ப்பம் ஒரு சதிராடும் சூன்யக்காரி! பொங்கி எழும் வாலிபம் இருக்க உம் என்ற மாத்திரத்தில் பகைவரைச் சங்காரம் செய்யும் திறனிருக்க-அவர்களையெல்லாம் விட்டுச் செல்வச் சிரிப்பிலே ஆழ்ந்து அழுகிப்போன பிணத்திற்கு மாலை சூட்டும் மாய்மாலக்காரி அவள்! அந்தச் சந்தர்ப்பத்தின் குளிர்ப் பிடியிலே ஏழைக் கந்தையாக்கள் எப்படி மாட்ட முடியும்? 66 99 இப்படியே ஆண்டுகள் பல ஓடின. ஓடும் ரயிலில் ‘டிக்கெட் பிளீஸ்' என்றபடி நகர்ந்துகொண்டிருந்தேன் நான்! அந்த ஆள் மௌனமாகச் சிந்தனையை எங்கோ மேயவிட்டுக்கொண் டிருந்தான். சரிதான்...மாட்டிக்கொண்டான் ஒருவன் '” என்று நினைத்தபடி அவனை அதட்டினேன். அவன் திரும்பினான். "என்னைத் தெரிகிறதா சார்! நான்தான் சார் நான்தான் சார் உங்களோடு கல்லூரியில் படித்த கந்தையா !" என்றான். என்னால் நம்ப முடியவில்லை. கந்தையா எங்காவது வெளி நாடுகளிலே மேல் படிப்புக்காகச் சென்றிருப்பான்-உலகம் போற்றும் அறிஞனாகத் திகழ்வான்- என்று நினைத்துக்கொண்டி ருக்கும் நான், சாதாரணக் கந்தல் அணிந்த கந்தையாவை நினைத்துப்பார்க்கமுடியவில்லை ! 66 என்னப்பா கந்தையா ! உன்னோடு சேர்ந்த கூட்டாளிக ளெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? முதல் வகுப்பு வாங்கிய ராமுவுக்கு அமெரிக்கா செல்ல" ஸ்காலர்ஷிப்' கிடைத்து விட்டதா? கவிஞர் கண்ணையன் ஏதோ தமிழ் ஆராய்ச்சி செய்யப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பானே," என்று ஆர்வ மிகுதி யால் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். 66 ஆமாம்! கந்தையா முதல்தரமான பேச்சாளன் ; எதிர் காலத்தில் நல்ல அரசியல்வா தியாக வருவான் என்று எதிர் பார்த்தீர்கள். “ராமு ஒரு கணித மேதை! கண்ணையன் ஒரு கவிஞன்! சுந்தரம் ஒரு சங்கீத ரத்தினம்! கோபாலன் சிறுவனாக இருக்கும் போதே பறக்கும் விமானம் செய்த ஆராய்ச்சிக்காரன். அவர்கள்