உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடுக்கிடும் கதை [குறிப்பு: ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கற்பனை தீட்டப்படுகிறது.) நியூயார்க் நகரத்தைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம், சிலர் நேரே பார்த்திராவிட்டாலும்! அமெரிக்காவின் அழகுத் திருநகர் மட்டுமல்ல; அகிலத்தின் எழில்மாடம் என்றெல்லாம் வர்ணிப்பர் நாடு சுற்றிகள் ! வானத்தைத் தொடும் மாடமாளிகை கள் அங்கே உண்டு! உச்சியிலே எரிவது மின்சார விளக்கா, அல்லது நட்சத்திரமண்டலம் வரையிலே அந்த உப்பரிகை உயர்ந்து நிற்கிறதா என்ற ஐயப்பாடுகள் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு ஏற்படுவது சகஜம். அத்துணை உயரம் பொருந்திய பல அடுக்கு மாடிகள் உள்ள ஹோட்டல் ஒன்றில், உச்சிப்பகுதியில், மூன்று நண்பர்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தார்கள். அவர்கள் நகர் சுற்றிப் பார்க்க வந்தவர்கள். உயர்ந்த கட்டிடங்களுக்கு மேலே ஏறிச் செல்வதற்கான, லிப்ட்” வழியாகக் கீழே வந்தால், அந்த மூவரும் நகரத்தின் சிங்காரப் பகுதிகளை யெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு பத்து மணிக்கு மீண்டும் தங்களின் அறைக்கு திரும்புவது வழக்கம். இப்படிச் சிலநாட்கள் மூவரும் நியூயார்க்கின் நேர்த்தியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். 66 ஒருநாள் அவர்கள் வேடிக்கை விநோதங்கள் விசித்திரக் கேளிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினார்கள். கீழ்த்தளத்திலுள்ள ஹோட்டல் மானேஜர் அவர்களைப் பார்த்து வருத்தத்துடன் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது;