உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசிக் கட்டம் 199 படுத்தி அழைத்துச் செல்வதற்காகக் கோபாலின் சென்னை விஜயம் நடைபெற்றது. மஞ்சுளாவின் கோபம் தணியாத காரணத்தால் மாமனாரின் யோசனைப்படி கோபால் அங்கே ஒரு மாத காலம் தங்கவும் முடிவு செய்துவிட்டான். நானும் மஞ்சுளாவும் இப்போது வெகு கஷ்டப்பட்டுச் சந்தித்தோம். மஞ்சுளா டில்லிக்குப் போகக்கூடாது என்று நான் வேண்டினேன். அவளும் என்னைப்போலவே முடிவு செய்திருந்தாள். மஞ்சுளா டில்லிக்குப் போய்விடுவாள், பிறகு தன் வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்று எண்ணியிருந்த கோகிலாவுக்கு, மஞ்சுளா டில்லிக்குப் போகப் போவதில்லை என்ற செய்தி இடியாக விழுந்தது! கோபாலோ எப்படியும் மனைவியைச் சமாதானப்படுத்திவிடலாம் என்ற தைரியத்தில் தங்கியிருந்தான். கோபாலுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. அவனுக்குத் தெரியாது எனக்கும் அவன் மனைவிக்கும் நட்பு என்பது! ஒரு மாதம்-இரண்டு மாதம்-மூன்று மாதம்- கோபால் தங்கி இருந்தான் சென்னையிலேயே ! கடைசியாகக் கோபாலும் மஞ்சுளாவும் டில்லிக்குப் போகப்போகிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. மஞ்சுளாவிடம் கேட்டேன். அவளும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஓடிவிட்டாள். அவள் என்னைக் கிண்டல் செய்வதற்காக அப்படிச் சொன்னாள் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு ஒரே ஆத்திரம் பிறந்துவிட்டது! மஞ்சுளா டில்லியிலே சென்று வாழ்வதா? நான் சென்னையில் அவளை நினைத்து ஏங்குவதா? என்று பெருமூச்சுவிட்டேன். ந்த அவளைக் கொன்று யாருக்கும் பயன்படாமல் செய்துவிட வேண்டுமென்று துடித்தேன், அன்று வெளியிலே சென்றிருந் நான், 'ரிவால்வர்' சகிதம் வீட்டுக்குத் திரும்பினேன், மஞ்சுளா வைக் கொலை செய்து, அவள் டில்லிப் பயணத்தைத் தடுக்க வேண்டுமென்று முடிவுகட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந் தேன். கீழ் வீட்டில் வேலைக்காரச் சிறுமி நின் று கொண்டி ருந்தாள். அவளிடம், கோபால் எங்கே?' என் று கேட்டேன். அவர் ஊருக்குப் போய் விட்டாராம் ” என்று பதில் கூறி விட்டு அவள் வேகமாகப் போய்விட்டாள். கீழ் வீட்டில் மஞ்சுளாவைத் தேடினேன் ; காணவில்லை! சரி, அவளும் போய் விட்டாள் ஏமாற்றத்தோடு மாடிக்குப் போனேன். அங்கே என் மனைவி கோகிலாவைக் காணவில்லை. மேசைமீது ஒரு கடிதம் இருந்தது. பிரித்துப் பார்த்தேன். 66 என்