உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் ! . அய்யோ ராஜா! சென்னை கோடம்பாக்கம் 'ரயில்வேகேட் ' தெரியுமா உங்க ளுக்கு? அந்த 'கேட்'டை சபிக்காதவர்கள் கிடையாது சென்னை ஸ்டுடியோக்களுக்கு அவசரமாகப் போகிற நடிகர், நடிகை, முதலாளி, தொழிலாளியிலிருந்து, வட பழனி ஆண்டவன் கோயிலுக்குப் போகிற பக்தர்கள் வரையிலே காரிலும், வண்டி யிலும், ரிக்ஷாக்களிலும், பாதசாரிகளாகவும் தேங்கி நின்று கொண்டு, 'கேட்'டின் முன்புறத்திலேயிருக்கிற சிவப்பு விளக்கு எப்போது அணையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏறத்தாழ அரைமணி நேரம் கால் மணி நேரம் அங்கே நின்று தவமிருந்து, அதன் பின்னரே நகர முடியும். கார்களிலே அமர்ந் திருக்கும் நகைச்சுவை நடிகர்கள், காமி சத்யபாமா கதவைத் திறவாய்!" என்று தங்களுக்குள்ளேயே பாடிக் கொள்வார்கள்... “ சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குது! பக்கத்திலேயிருப்பவனை ஒதுக்கி விட்டுச் சிவப்பு விளக்கு அணை வதை ஆவலோடு உற்று நோக்குவார்கள் பக்தர்கள். " 66 என்று இதற்கிடையே தமிழ்நாட்டுச் செல்வங்களின் படையெடுப்பு ! அய்யா சாமி! காலணா கொடு சாமி!” என்ற சுயதேவைப் பூர்த்திப் பாடலோடு கார்களையும் சூழ்ந்து கொள்வார்கள். அந்த ‘ரயில்வே கேட்'டை நம்பியே, சில வியாபாரிகள் தங்கள் கடைகளை இருமருங்கிலும் விரித்து வைத்திருந்தார்கள். அந்த இடத்திலே கேட்' மூடப்பட்டு, நேரம் ஆக ஆக முக மலர்ச்சியோடு இருப்பவர்கள் அந்த வியாபாரிகள் மட்டுந்தான்! ❝