உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஒலிக்க, அவள் ஈ ஓட்டிக்கொண்டு, அந்தக் ஊசிப்போன வடை களையும் சவுத்துப்போன முறுக்குகளையும் காப்பாற்றுகிற கலையிலே கருத்தைப் பறி கொடுக்காதார் இருக்க முடியாததுதான்! திடீரென்று படத்திலே அப்படி ஒரு பாத்திரம் ஏற்று நடிக் வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால்-அதற்கு முத்தம்மா சம்பள மில்லாத ஆசிரியராக இருப்பாள் அல்லவா? அந்தப் பகுதியிலே தொத்தி விளையாடும் வயிற்றுக் விஷஜுரம் முதலிய கொடிய வியாதிகளுக்கான காரணங்களில் முத்தம்மாளின் பலகாரக் கடையும் ஒன்றாயிற்று. கோளாறு, அவள் என்ன செய்வாள் பாவம்; நாள் முழுதும் உழைத்து நாலணா எட்டணா கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்த கணவனும் ஒரு குழந்தையை அவளுக்குக் கொடுத்துவிட்டு மின்சார ரயிலிலே தலையைக் தலையைக் கொடுத்துவிட்டான் தரித்திரம் தாங்கமுடியாமல் ! " எல்லோரும் வாழவேண்டும். முத்தம்மா ! என்ற பாடலைப் பக்கத்துக்கடை கிராமபோன் பெட்டி மூலம் அவள் பலமுறை கேட்டிருக்கிறாள். அந்தப் பாடல் அவள் மடியிலே குதிக்கும் பாலகனுக்கு விளையாட்டுக் காட்டத்தான் பயன் பட்டது. ... "எல்லோரும் வாழவேண்டுமாமே; எல்லோரும் வாழவேண் டியதுதான்! யாரையா வாழவிடுகிறார்கள்?" இப்படிக் கேள்விகள் முத்தம்மாளின் இருதயத்திலே தாக்காமல் இல்லை. கணவன் இறந்த பிறகு ஒவ்வொரு இரவும் அவள் அந்தப் பகுதி கூலி களிடம் படும் அவஸ்தை அவளுக்கல்லவா தெரியும். மார்பிலே இருக்கும் குழந்தையின் வாயை விலக்கிவிட்டு, அது அழுது துடிக்கத் துடிக்க நாலணா எட்டணாக்களுக்காக; அய்யோ... அந்த முத்தம்மா..... வேறு வழி ? கணவன் நல்லவழி பார்த்துக் கொண்டு போய்விட்டான். வயிற்றிலே ரத்தத்தோடு ஊறிய பாசம் குழந்தையாக உருவெடுத்து அவள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறது. அதைக் காப்பாற்றுவதற்காக அவள் பலரது முகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சிரிப்பிலே ஜீவன் இருக்கிறதோ இல்லையோ பல்லைக் காட்டித் தான் தீரவேண்டும். அவள் மேற்கொண்டிருக்கிற தொழில் அப்படிப்பட்டது!