உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 'பிரபு! என் கற்பை இகழாதீர்கள். என் இருதயத்தின் சாபத்துக்கு இரையாகா தீர்கள்." ரையாகாதீர்கள்.” என்னடி நீலி! அர்தோல்மீது உனக்கு கள்ளக் காதல் இல்லையானால் இதோ இந்த விஷத்தை அவனுக்குக் கொடு பார்ப்போம். உன் கையாலேயே அவனுக்கா; வேண்டாம்! நானே சாப்பிட்டுச் சாகிறேன்!” " முடியாது! அர்தோல் உன் கையால் வேண்டும்." அப்படியே ஆகட்டும்.” விஷம் அருந்த சத்தியவதி விஷத்தை வாங்கிக்கொண்டு ஓடுகிறாள். தேவலாயத் திட்டங்களைப் போட்டவாறு இருந்த அர்தோல் அயர்ந்து தூங்கிவிட்டான். அப்போதுதான் கையில் விஷக் கோப்பையுடன் அங்கே சத்தியவதி நுழைந்தாள். அர்தோல்!” என்னம்மா? ' இந்தா—இந்தப் பாலைக்குடி!' "பாலா? இந்நேரத்திலா?" 66 ‘ஆமாம் என்னைப் பத்தினியென நிரூபிக்க நீ இந்தப் பாஷாணம் கலந்த பாலைச் சாப்பிடவேண்டுமாம்.” 66 என்ன?- தாங்கள்-?” உன் ஆசை நாயகியெனக் குற்றம் சாட்டிவிட்டார் அரசர்- இல்லை யென்பதை நிரூபிக்க, என் கையாலேயே நீ விஷம் சாப்பிட வேண்டுமாம்." 66 ஆ! அம்மா! யார் கட்டிவிட்ட பழி இது? அரசரா நம்பினார் இதை? என் அண்ணா, இந்த வீண் புகார்களை நம்பி, தம்பியைத் தகாப் போக்குடையோன் எனக் கூறவும் துணிந்து விட்டாரா? அண்ணா! அண்ணா என் மனம் புண்ணாகும்படி ஏன் அண்ணா அப்படிப் பேசினீர்கள்? அய்யோ! அம்மா! என்னால் தாங்க முடியவில்லையே!” " என் அன்புமகனே, நீ பேசநேரமில்லை அர்தோல் ! விஷத்தைச் சாப்பிட்டால்தான் ராஜபுத்திர வம்சத்தின் மானமே காப்பாற்றப்படும்.”