உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் வேண்டுமானால் எனக்கு கொஞ்சம் விஷத்தைக் கொடுத்துவிடுங் கள்-அந்த விரியன் பாம்பிடம் என்னை ஒப்புவிக்கா தீர்கள்.” வரை இப்படியா ஏமாற்றுவது? நன்றாயிருக்கிறது நியாயம். உன்னை நம்பியிருக்கிற ஒரு உன் உடம்பு சுகமாக வேண்டு மென் று குண்டப்பன் எவ்வளவு கஷ்டப்படுகிறார்?" " ஆமாம் என் உடம்புதான் அவனுக்குத் தேவை. அதற்காகக் கஷ்டப்படுகிறான். கனி, அழுகிவிடாமல் காப்பாற்றுகிறார்களே ஏன்? அதன்மேல் உள்ள கருணையாலா? இல்லை; அதைச் சுவைத்துத் தின்ன வேண்டுமென்ற காரணத்தால்! அந்த வகையைச் சேர்ந்தவனம்மா இந்த வஞ்சகன் !" ஏன் அவர் மீது சீறிவிழுகிறாய்? நீ அவருக்கு வைப்பாட்டி. தானே ?" கேட்டாள் சூர்யா. அய்யோ ! சொல்லா தீர்களம்மா! அப்படி இன்னொரு முறை சொல்லா தீர்கள்! கேளுங்கள் தாயே என் கேலிக்கதையை! புண்ணாகிப்போன உடல்களைக் கண்ணாகக் காத்து வரும் புனித வதியே, வெறியனின் கோர விளையாட்டால் கந்தல் கந்தலாகப் பிய்த்தெறியப்பட்ட என் வாழ்க்கைச் சரிதத்தைக் கேளுங்கள். பட்டாளத்திலே ஒரு சிப்பாய் அவர்தான் என் பாசத்திற்குரிய கணவன். அவரைப் படாத பாடு படுத்தி என்னையும் பஞ்சணைக்கு இழுக்கிறான் பாவி குண்டப்பன். குண்டப்பன். அவர் சிப்பாய்தான்; ஆனால் காருண்ய சீலர் தாயே! என் மூச்சிலே கலந்துவிட்ட ஜீவன் அவர். என் கண் எதிரிலேயே அந்தத் தடியன் அவரைத் தாக்கினான். எனக்கு தலை சுற்றியது. கந்தா, கந்தா என்று கதறிக்கொண்டு தரையில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். விழித்துப் பார்த்தபோது நான் ஆஸ்பத்திரி யில் இருக்கிறேன்." 66 " கந்தன்!” "ஆமாம், அம்மா! ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமா ?" 'சமீபத்தில் பட்டாளத்தில் சவுக்கடி தண்டனை கிடைத் ததே - அவரா? " 66 ஆம் தாயே அந்த நிலவுதான் என் லட்சிய கீதம். அவரைத்தான் துவளத் துவள அடித்தான் அந்த துன்மார்க்கன் ; துவளத் துவள அடித்தான். நான் தொத்தி விளையாண்ட