உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் இந்த நேரத்திலேதானா தன் காதலுக்கோர் போட்டிக்காரியாக வேணி முளைக்கவேண்டும் ? யார் இந்த வேணி? எப்படி அவள் கந்தனுக்கு மனைவியானாள்? என்பனவற்றைக் கேட்டறிய வேண்டு மென்று சூர்யாவுக்கு ஆசைதான். ஆனால் இவைகளையெல்லாம் விசாரித்துத் தன் வேதனையை அதிகரித்துக்கொள்ள விரும்பவில்லை. அவள் தன் மென்தோள்களிலே துயில் கொண்ட கந்தனை வேறொரு பெண்ணாம் வேணி உரிமை கொண்டாடுவதா? சூர்யாவால் வேணியின் காதல் போட்டியை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. ஆசைக் கனவுகளைப் புதுப்பித்துக்கொள்ள சூர்யாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆமாம்...மருந்து கொடுப்பது போல வேணிக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடலாம். பின்னர் கந்தன் வேணியை மறந்துவிடுவான். பின்னர் சூர்யா பிடித்துக்கொள்ளலாம்... இடத்தைப் அருமையான யோசனை தான் ! சூர்யாவின் மென்மை இருதயமோ இந்தக் கோர நினைப்பால் நைந்துபோனது. பிளாரென்ஸ் நைட்டிங்கேல்களின் அரும்பெரும் தொண்டுகளால் ஏற்றம் பெற்ற நர்ஸ் தொழிலுக்குக் கேவலம் விவகாரத்துக்காகக் களங்கம் கற்பிப்பதா? ஒரு காதல் சூர்யாவின் உள்ளம் ஒரு போர்க்களமாகியது. அவளையறியா மலே வாய்மட்டும் முணுமுணுத்தது. 66 அவள் வாழட்டும்வேணியின் வாழ்வு புத்துயிர் பெறட்டும்!" அந்த தியாகச் சின்னம் இப்படித்தான் மொழிந்தது. மலர்ந்திருந்த அவளுடைய செந்தாமரை முகம் இறுகிப்போன அல்லிமொட்டுப் போலாயிற்று. சோகத்தின் மின்வேகத் தாக்கு தலால் அவளுடைய உதடுகள் கருத்துப்போய் வெடிப்பு விழுந்தது. எழுந்திரு! கலங்காதே ; அவருக்கு நான்தான் சிகிச்சை செய்கிறேன் துக்கம் தோய்ந்த குரலிலே ஆறுதல் கூறினாள் சூர்யா. 66 " 66 சூர்யாவின் இந்த வாய்மொழி கேட்டதும், வேணியின் முகத்திலே மகிழ்ச்சியின் சாயல் படிந்தது. எப்படியம்மா இருக்கிறது இப்போது? பேசுகிறாரா? வேணி என்று பெயர் சொன்னாரா?" என்