உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமந்தவள் 231 இத்தகைய நினைவுகளோடு தாழ்வாரத்தில் உலவிக் கொண்டிருந்தேன். தாயின் அன்புக்கரத்தின் தழுவல் இல்லா த பாலைவனம் போன்ற ஒரு வறண்ட எதிர்காலத்தைக் கற்பனை செய்து களைத்துப்போய் மெலிந்த பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தது என் நெஞ்சம். தாயில்லாத வீடு. தாய் அளிக்காத உணவு. தாயின் அன்பு மொழி கேட்டு இன்பம் பெறமுடியாத செவிகள். தாயின் அருள் முகம் காண இயலாத விழிகள். தாயில்லாத நான். இவைகள் எல்லாம் எனக்கு வருங்காலத்தில் புயல்-பூகம்பம்-சூறாவளி எனத்தக்க பெரும் சுழற்சிக் கொந்த ளிப்புகள் அல்லவா? தாயின்மீதுள்ள பாசம் மட்டும் மனிதனை ஏன் இவ்விதம் ஆட்டிப்படைக்கிறது! வாட்டிவதைக்கிறது? தாய் என்ற சொல்லுக்கு இவ்வளவு மகிமை ஏன்? மதிப்பு ஏன் ? உண்மை யிலேயே தாய் என்றால் யார்? தாய்க்குரிய இலட்சணங்கள் தான் என்ன? பெற்றுவிட்டால் அவள் தாயாகிவிடுவாளா? பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் தாய்கள் தானா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற அவா உள்ளத்தில் கொடி கட்டிப் பறந்தது. அப்போது என் தாயார் மெல்ல மெல்ல என் பக்கம் வந்து நின் என் முகத்தை அன்பு கசிய உற்றுப்பார்த்து “ஏனப்பா ஒரு மாதிரியிருக்கிறாய் ?" என்று ஆவலைக் கொட்டினார்கள். று, "ஒன்றுமில்லையம்மா. உட்காருங்கள்!” என்றேன். என்னை உட்காரவைத்தவாறு அவர்களும் உட்கார்ந்தார்கள். 6. ' அம்மா! ஒரு சந்தேகம்-நீங்கள் விளக்கவேண்டும் !” என்றேன். 66 என்னடா கண்ணு? ஓயாமல் படிக்கிறாய்-ஊருக்கெல்லாம் பேசுகிறாய்-என்னிடத்தில் வந்து சந்தேகம் கேட்கிறாய்?" என்று அம்மா கொஞ்சினார்கள். 66 ஓயாமல் படிக்கிறவன் - ஒப்பற்ற மேதை-உலகுபுகழ் நிபுணன் - என்றெல்லாம் உயரத்தில் நிற்கிறவனுக்குக்கூட சில சமயங்களில் தாயின் அருமை தெரிவதில்லையே; அந்த அடிப்படை யில் எழுந்ததுதான் இந்தச் சந்தேகம். 'ம்! மேலே சொல்லு!" என்றார்கள் தாயார்.