உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமந்தவள் 239 வைத்துக்கொண்டு வாங்கிக் பிணிக்கு மருந்து தருவதும் தூக்கி உலவுவதும்தான் அவளுக்கு இரவு முழுவதும் வேலை. குழந்தைகள் போட்ட கூச்சலைக் காதிலே கொள்ளாமல் சந்திரனும், சௌந்தரியும் தங்கள் படுக்கை யறையிலேயே வெகுநேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அந்தக் கொடுமையைச் சேகரால் சகிக்க முடியவில்லை. தன் மனைவி கஷ்டப்படுவதை நினைத்து அழுவதா? அல்லது பெற்ற குழந்தையைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற வன்னெஞ்சர்களை நினைத்து அழுவதா? பொழுது விடிந்தது. குழந்தைகளோடு கஷ்டப்பட்ட மரகதம் விடிந்த பிறகு சற்று அயர்ந்து தூங்கிவிட்டாள். அதனால் சௌந்தரிக்கு 'பெட்காபி பெட்காபி' கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை. ஆத்திரங்கொண்ட சௌந்தரி, மரகதத்தை மிகச்சூடான வார்த்தைகளில் போட்டு வறுத்து எடுத்தாள். மரகதம் எதுவும் பேசாமல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவலையெல்லாம் அந்தக் குடும்பத்தில் தன்னால் எந்தக் கலகமும் வந்து விடக்கூடாது என்பதுதான்! சௌந்தரியின் ஏசற்கணைகளுக்கு எதிர் நிற்க முடியாமல், திக்குத் தெரியாமல் திண்டாடும் மான்போல் மிரள மிரள விழிக்கும் மரகதத்தைக் கண்டு துடித்துவிட்ட சேகரன் அண்ணியின் மீது எரிதழலென வார்த்தைகளை அள்ளி வீசினான். “ மரகதம், எனக்கு மனைவி. உங்களுக்கு வேலைக்காரி அல்ல. உங்கள் குழந்தையை வளர்க்கும் பால்காரி அல்ல!" என்று உறுமினான். 66 "சரிதான் நிறுத்து! பெரிய ராஜகுமாரியைப் போய்த் திருமணம் செய்து விட்டாயாக்கும்!” என்று சௌந்தரி செய்த கிண்டலுக்குச் சபாஷ் கூறி, சந்திரன் அங்கே வந்து விட்டான். சௌந்தரியால் சேதமடையாமல் கட்டிக் காக்கப்படும் யௌவனத்தின் நீங்காத அடிமையல்லவோ அவன்! ஆகவே அவள் பக்கம் நின்றுதான் அவன் நியாயம் பேசினான். அண்ணன் தம்பிகளுக்கிடையே வார்த்தைகள் முற்றிப்போய் கை கலப்புவரையில் சென்று, இருவரும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு மரணமுகப்புநோக்கி நடப்பதற்குத் துவங்கிவிட்டனர்.