உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தார்த்தன் சிலை கெண்டை விழி. கரு வண்டு நிகர் கூந்தல். குங்கும் வண்ணத்தின் குறுநகையைச் சிந்துகின்ற அந்தி வானத்துச் சிவப்பெல்லாம் அவள் இதழில்... கன்னத்தில்! தாங்குமோ அன்றித் தளர்ந்து வளையுமோ என்றெண்ணத் தோன்றும் வகையினிலே இடையழகும் இளமைப் பேரழகும் போட்டியிடும் பொற்பாவை. அலைதோறும் அலைதோறும் வருகின்ற நுரை போல அவள் உதிர்க்கின்ற சொல் எல்லாம் சுவை மணக்கும் தேன் துளிகள். நிலம் நோகும் என அஞ்சும் அவள் நெஞ்சம் நடையழகில் தெளிவாகும். சிப்பியிலே முத்து விளைகின் உண்மையினைப் பொய்யாக்கும் அவள் சிரிக்கின் றபோது தெறிக்கின்ற நிலவின் ஒளி!, யாழினிலே குழலினிலே இனிய இசைதான் எழும் என்போர் மறைந்திருந்து அவள் பாட்டைக் கேட்டு "யார் சொன்னார் ; யாழ் குழலில் பாட்டும் உண்டு" எனக் கருத்தை மாற்றிக்கொள்வர். ற அவன் பெற்ற பேறே அரும்பேறு என வாழ்த்தியது அவளைப் பெற்றவனை-உலகம் ! உனைப் பெற்றவரை வணங்குகின்றேன். தமிழே! உயிரே ! ஓவியமே! உனைப் பிரிந்து ஒருக்கணமும் நில்லாது என்றன் கூடு ! என உறுதி எடுத்துக் கொண்டு அருகிருந்தான். இலக்கியத்து எழிலெல்லாம் காவியத்துச் சுவை யெல்லாம் அவளோடு வாழ்வதிலே காண்கின்றேன் எனப் பெருமை கொண்டிருந்தான். 5-16