உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் வழியே வீசியெறிந்தான். அந்தப் பசலை எந்தக் காட்டில் விழுந்ததோ? எந்தப் பாறையில் விழுந்து சுக்கு நூறானதோ? குமரேசின் மனம் சிறிது சாந்திபெற்றது. 'ஒரு விபச்சாரியின் தொடர்பு இன்றோடு ஒழிந்தது. என் பெயரைச் சொல்லி வருங்காலத்தை வீணாக்காமலிருக்கக் குழந்தையும் ஒழிந்தது. இனிமேல் நான் தனி ஆள். இந்தத் தாசி அவனோடு போகட்டும்!’ என்று அவன் மனம் பேசிற்று. வண்டி நிற்கும் ஸ்டேஷனை திர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் அவன் பார்வை, முன் உட்கார்ந்திருந்த இடத்தில் பாய்ந்தது. வாலிபனின் கரங்கள் இப்போது நடுக்கமின்றிச் சந்திராவின் கன்னத்திடம் சென்றன. அடக்க முடியாத ஆவலுடன் அவன் கன்னக் கதுப்பை விரல்களால் அழுத்தினான். சந்திரா திடுக்கிட்டு விழித்தாள். அவன் இப்போது சிரித்தான். சீ!" என்ற பெரிய சப்தத்துடன் சந்திரா துள்ளிக் கிளம்பினாள். வாலிபனின் கன்னத்தில் அவள் கரங்கள் மாறி மாறி விளையாடின. எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். குமரேசும் அருகே வந்து விட்டான். அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அத்தான் !” என்று கொண்டாள் சந்திரா. 06 66 அவனைக் ஆரம்பத்திலிருந்து நீ பார்த்த பார்வை......... ஆத்திரமாகச் சொல்லப்போனான் குமரேஸ். கட்டிக் " என்னவோ என் சிறு வயதில் இறந்துபோன அண்ணன் மாதிரி இருந்தது.......பார்த்தேன்...இந்தப் பாவி விம்மியழுதாள். பெட்டியிலிருந்தவர்கள் தீர்த்தார்கள். 66 என்று விம்மி அவனைத் திட்டித் கடலூர் ஸ்டேஷன் வந்தது. அந்தச் சபலம் பிடித்த மைனர் இறங்கிப் போய்விட்டான். இதற்காகவே இந்தப் பயல்கள் ரயிலில் ஏறுவது ” என்று ஒரு குரல் கிளம்பிற்று. 66 திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் குழந்தையைக்கூட மறந் திருந்த சந்திரா, "குழந்தை எங்கே அத்தான்?" ஆவலோடு கேட்டாள். 66 பக்கத்தில்தான் இருக்கிறது; இங்கேயே என்றான் குமரேஸ், அவன் முகம் கறுத்துவிட்டது. என்று இறங்கு ’