உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 66 கனிமொழி ! கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் உனக்கு எத்தனை தடவை சொல்லி விட்டேன்; நான் ஆடுவது ஆட்டக் காவடி-அவர்கள் தூக்குவது பக்திக் காவடி யென்று!” 6 “அவர்கள் தனியாக ஆடட்டும் பக்திக் காவடி! நீங்கள் வேறொரு நாளைக்கு ஆட்டக் காவடி ஆடுங்கள்! உங்கள் கலைத் திறமையைக் காட்டுங்கள்! யார் வேண்டாமென்றது? இரண்டும் ஒரே நேரத்தில் வேண்டாம்-இழிவும் பழியும் வந்து சேரும் ! உங்கள் ஆட்டக் காவடித் திறமையைக் காட்ட நானே ஏற்பாடு செய்கிறேன்; ஒரு நாள் ஊர் மக்களைக் கூட்டுவோம்; அவர்கள் எதிரே உங்கள் கலைத்திறமையைப் பொழியுங்கள் ; அதைக் கண்டு களிக்கிறேன் நான்! அதை விட்டுவிட்டுக் காசுக்காக, மாசு ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் ! ” 6 6 பைத்தியக்காரி ! நூறு ரூபாய் ஒரு சாமான்யமா ?" “எதற்கு நூறு ரூபாய் இப்போது?- நானென்ன உங்களை ஜரிகைப் புடவையும் தங்க நகையும் கேட்டுத் துன்புறுத்திக் கொண்டாயிருக்கிறேன்? குடிக்கக் கஞ்சி போதும் - குடியிருக்க உங்கள் நெஞ்சு போதும், எனக்கு !” 66 கனிமொழி!...நீ என்ன சொன்னாலும் சரி, நாளைக்கு நான் பழனிக்குப் போய்த்தான் தீருவேன் முடிவை மாற்றவே முடியாது!” என்று வேகமாக எழுந்தான் கந்தன். அவன் கையைப் பிடித்துக் கனிமொழி நிறுத்தியபடி, 6 G நன்றாக யோசித்துப் பாருங்கள். ஊர் கேலி செய்யும்; உங்களையே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உயிர்த் தோழர்கள் எல்லாம் ஊரார் முகத்தில் விழிக்க முடியாதபடி அவமானத்தால் தலையைக் குனிந்து நடக்க நேரிடும்; நண்பர்களை உத்தேசித் தாவது இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் !” 66 " சரி ! ஒரே முறை! அனுமதி கொடுத்துவிடு! இனிமேல் போகவில்லை !" 6 6 ஒரே முடியுமா? 6 6 முறை விஷம் சாப்பிட அனுமதி கொடுக்க கனிமொழி, குற்றம் செய்கிறோம் என்பது தெரிகிறது. தெரிந்தாலும் சில நேரங்களில் செய்துதான் தீரவேண்டியிருக் கிறது!”