உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காவடி 27 பம்பை ஒலிகள் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்தன. கனி மொழியின் இருதயத்திலே மட்டும் எங்கேயோ ஒரு மூலையில் ஏதோ ஓர் ஒலி ஈனக் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு கதவு தட்டும் சப்தம் கேட்டுக் கனிமொழி கதவைத் திறந்தாள். மிராசுதார் மிருகண்டு முதலியார் மளமளவென்று வீட்டுக்குள்ளே நுழைந்தார். கதவை அவரே தாழிட்டார். காரணத்தை விளக்கவா வேண்டும்? கனியிருக்கிறது— வௌவால் பறந்து வந்துவிட்டது! "9 "யாரடா நீ அன்று நெற்றியில அலகு குத்திக்கொண்டு பக்தி ததும்பக் காவடி எடுத்த கண்ணியவானா நீ ? கனிமொழி நெருப்பானாள். அந்த அலகு-வெள்ளி கன்னத்தை வருடு ! ' ஆமாம், கிளியே ! கிள்ளை நீ உன் அலகால் என் கை தொட்டார் மிராசுதார். அலகு ! என்று கனிமொழி- பகுத்தறிவுப் பெண்ணன்றோ! கண்ணகி சரிதம் படித்தவளன்றோ! அவள் கை விளையாடிற்று, பண்ணையாரின் கன்னங்களிலே ! இருந்தாலும் வெறிபிடித்த வேங்கை-நெறி பிறழா மான்குட்டி-ஆபத்து நெருங்கிவிட்டது! கூக்குரல்- கூச்சல்-அபயங்கேட்கும் அபாய அறிவிப்பு-அந்தக் குடிசை யிலே இருந்து கிளம்பிற்று! அப்போது அங்கே வந்து குதித் தான் ஆட்டக்காவடி கந்தன். மிருகண்டு மிரண்டார். கந்தனின் கால்களில் மிதியுண்டார். கனிமொழி தப்பினாள். கதைகளிலே கதாநாயகிக்கு ஆபத்து வருவதும், கதாநாயகன் காப்பாற்ற வருவதும், பின் காதல் உதயமாவதும் வழக்கமாகிவிட்டதைப் போலவே, கனிமொழியின் வாழ்க்கையிலும் அப்படி ஓர் உண் மைச் சம்பவம் எதிர்பாராமல் நடந்துவிட்டது. கந்தனும் கனிமொழியும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கு அவள் விதித்த நிபந்தனைகள் ஏராளம். அவைகளிலே ஒன்றுதான், அவன் ஆலயங்களுக்கு ஆட்டக் காவடி ஆடுவதை நிறுத்த வேண்டுமென்பது! ஒத்துக்கொள்ளா மல் இருப்பானா ?-ஆட்டக்காவடி நிறுத்தப்பட்டது—அவனுக்கு அவள் அறிவு புகட்டும் ஆசானாக ஆனாள். கந்தனும் அவளுக்குக் கருவிழியானான். அதன் பிறகே இருவருக்கும் திருமணம். ஊரே ஆச்சரியத்தில் மூழ்கியது! கந்தனின் வழியிலே பல