உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கையின் காதல் கைலாயத்தில் சிவபெருமான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந் தார். கழுத்திலிருந்த பாம்பு கீழே இறங்கி மான் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த பார்வதி தேவிக்குத் தன் பாதங்களை காளை மாடு சொரசொரப் பான நாக்கால் நக்கிக்கொண்டிருந்ததுகூடத் தெரியவில்லை. தேவ லோகத்துப் பெண்களுக்கே தூக்கத்தில் இடி விழுந்தாலும் தெரியாது போலிருக்கிறது; இல்லாவிட்டால் சீதா பிராட்டி தூங்கும்போது அவள் மேனியை இந்திரன் மகன் காக்கை உருவில் ரசித்திருக்க முடியுமா? பார்வதியின் முகத்தில் வியர்வை அரும்பு கட்டி இருந்தது. பரமசிவனாரின் உடலும் தூக்கத்தில் அசை வற்றுக் கிடந்தது. மகேஸ்வரனுக்கு ஐந்து தலைகள் அல்லவா? நான்கு தலைகளைக் கழற்றி மான் தோலில் சுருட்டி ஒரு மூலையில் வைத்திருந்தார், இல்லாவிட்டால் தூங்குவதற்கு வசதிப்படாதே! ஆழ்ந்த உறக்கம் அமைதி—அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் சிவன் தம்பதிகளின் பெரிய மூச்சுக்கள். சிவனின் தலையிலே ஒரு ஜடை சற்று வேகமாக அசைந்தது. அந்த அசைவைத் தொடர்ந்து கங்கா நடந்துகொண்டிருந்தாள். பூனையைப் போன்ற பஞ்சுப் பாதங்களைச் சிவனின் தலையில் வெகு லாவகமாக வைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தபடி எங்கேயோ போய்க்கொண்டிருந்தாள். . ஒரு ஜடையின் அடியில் போய் நின்றுகொண்டு, தங்கக் கரங்களைக் கிளைகளில் நீட்டியபடி யாரையோ எதிர்பார்த்திருந்