உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அரசனின் கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் அந்தப்புர மயிலாக, ஆலோசனை வழங்கும் அமைச்சாகக் களம்புகு நேரத்தில் பின் தொடரும் மறத்தியாகச் சுந்தரபுரி மக்களின் சுகத்தைக் கவனிக்கும் பாசமுள்ள தாயாக அந்த மாளிகையிலே சுடர்விட்டுக் கொண்டிருந்த மாணிக்கமாம் கோப்பெருந்தேவியாரைக் கொந்தளிக்கும் கடலாக மாற்ற வந்து சேர்ந்தது கொடுமையான புயல், சுழற்கண்ணி என்ற பெயரில் ! மன்னனுக்கு ராணியாக இருந்த தேவி, இன்பசாகரனுக்குத் தாயாகவும் மாறிய நேரந்தான், சுழற்கண்ணியின் படையெடுப் புக்கு ஏற்றநேரமாகி விட்டது. முற்றுகையிட்டாள், முடிசூடியை; உடனே வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டான் வேந்தன் ! ஆயிரந்தேர்-ஐயாயிரம் காலாள்-ஆனைப்படை-புரவிச்சேனை அத்தனையும் தாக்கினாலும் அசைக்க முடியாது அவன் அரண் மனைக் கோட்டைச் சுவரை. அவளோ, ஒரு விழி வீச்சில், அவனது மனக் கோட்டையைச் சுக்கு நூறாக்கி, நொறுங்கிப்போன ஒவ்வொரு அணுவிலும் நின்றுகொண்டு வெறியூட்டும் நர்த்தனம் புரிந்தாள். தேவி இன்பசாகரனோடு தாய்க்குலத்தின் பெருமையைத் தரணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தாள். தேவனோ திராட்சையினும் இனியதடி இந்த ரசம் " என இதழ் பருகிக்கொண்டு கிடந்தான், இளையவளோடு! அதுவும் அவனுக்குப் புதியவளோடு ! கதிர் மறைந்த உலகிற்கு இருள் நீக்கும் நிலவு போலக் கோப்பெருந்தேவியின் கவலை படிந்த வாழ்விற்கு வாட்டம் தவிர்க்கும் வைரமாக இன்பசாகரன் திகழ்ந்தான். பலகணியின் வழியாகத் தூரத்திலிருக்கும் பூரணச் சந்திரனைப் பார்த்து ரசிப்பதிலே ஒரு மகிழ்ச்சி இல்லையா? அதுபோலவே அரசனை அருகிலே வைத்து அன்பு காட்ட முடியா விட்டாலும் தொலைவிலேயிருந்து அவனைத் தொழுதுகொண் டிருந்தாள் கோப்பெருந்தேவி. பலகணிப் பார்வையாளர் மீது நிலவு, ஒளி மழையையாவது பெய்கிறது; அதுவும் கிடைக்கவில்லை அந்த 'அபாக்கியவதிக்கு ' ! இன்பசாகரன் மட்டுமே அவளுக்கு ஆறுதல் பொருளானான். அந்தப் பொருளையும் பூமியிலே புதைத்துவிடத் துடித்துக் கொண்டிருந்தாள் சுழற்கண்ணி. அதற்கான திட்டத்தையும் தீட்சண்யன் தயாரித்து விட்டான்.