உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 66 71 அருமை தம்பீ! அருமை! நான் வாசித்ததைவிட நீ வாசிக்கும்போது, பண்ணிலே மழலையின் இனிமை மறைந் திருக்கிறது! பெருமையை அதிகமாக்குகிறது. ஆகா! இந்தக் கீதத்தை அரண்மனை நந்தவனத்திலே உட்கார்ந்து வாசித்தால் மயில்கள் எல்லாம் தாமே வந்து எதிரே நின்று ஆடும்!” என்று சாகசப் பேச்சைத் தாய்க் குரலிலே கலந்து தந்தாள் சுழற்கண்ணி! இதோ இப்போதே போய்த் தோட்டத்தில் வாசிக்கிறேன். தோகை மயில்கள் ஆடுகின் றனவா என்று பார்க்கிறேன் குழலுடன் ஓட்டம் பிடித்தான் இளவரசன். 66 " எனக் சுழலியின் கண்கள் அகல விரிந்தன. அவள் முகத்தில் புதிய தேஜஸ் காணப்பட்டது. "வெற்றி! வெற்றி!' எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள், மகிழ்ச்சியோடு ! ! அரண்மனைத் தோட்டம்-அடுக்கு மல்லிகைப் புதரின் ஓரம் -அழகே உருவெடுத்த அரசிளங்குமரன் ஆரம்பித்து விட்டான் குழல் வாத்தியத்தை! இளையவள் கற்றுத் தந்த பண்ணை மாறி மாறி ஊதினான். பாவம்; அவனுக்கென்ன தெரியும்—அவள் கற்றுத்தந்த கீதம் பாம்புகளை அருகே வரவழைக்கும் கீதமென்று! பண்ணை அவனுக்குப் பாடமாக்க வேண்டும். அவன் அதை ஊதிக் கொண்டிருக்கும்போது தோட்டத்தில் தொலைவிலே விஷப் பாம்பை விட்டுவிட வேண்டும். குழலோசை கேட்டுப் பாம்பு அவனருகே வந்து படமெடுத்து ஆடும். பண்ணை அவன் நிறுத்தினால்,உடனே பாம்பு அவன் மீது சீறிப் பாய்ந்துவிடும். இப்படியொரு திட்டத்தைத் தீட்சண்யன் தீட்டித் தந்து, அதற்கு வெகுமதியாக அவளிடம் பெற வேண்டியதைப் பெற்று, அவளும் இளவரசனை அரண்மனைத் தோட்டத்திற்கு அனுப்பி விட்டாள். இன்பசாகரனின் குழலோசை குளிர்ச்சியை மொண்டு மொண்டு ஊற்றியது! ஆனந்தத் தென்றல் வந்து ஆரத் தழுவுவது போன்ற உணர்ச்சியைத் தந்தது! மகுடியிலும் இல்லாத மயக்க உணர்வை அந்தக் குழலிலே யிருந்தது புறப்பட்ட பண் கிளப்பியது. நேரம் பார்த்துக் கொண்டிருந்த கோர மனிதன் தீட்சண்யன், தான் பிடித்து வைத்திருந்த பாம்பை இளவரசனுக்கு அருகே யுள்ள புதரின் பக்கமாகக் கீழே விட்டான். விடுபட்ட பாம்பு, குழலோசை நோக்கி நகர்ந்தது. தன்னை நோக்கி ஆபத்து ஊர்ந்து வருகிறது என்பதை அறியாத அந்த அழகுப் பிறை நிலவு,