உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பவில்லை 85 தேர்ந்தெடுக்கிறார்கள். அவளது சிவப்பு நிறத்தையும், சேல் கெண்டை விழியையும், சேவல் கொண்டை நிறமொத்த இதழ் களையும் அவன் பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறான். மணம் நிறைவேறுகிறது. முதல் இரவுக்கான ரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஓலை வேய்ந்த வீட்டின் ஒரு மூலையில் பனை ஓலைத் தட்டியொன்று மறைக்கப்பட்டு அதுவே முதல் இரவுக்கான பள்ளியறையாகத் திகழ்கிறது. ஒரு தட்டில் கொய்யாப்பழம் ; ஒரு தட்டில் மலை வாழைப்பழம்; எருமைப் பால் ஒரு சிறிய கலயத்தில்; புதிய கோரைப் பாய்கள் ; தேங்காய் நார் அடைக்கப்பட்ட தோல் தலையணைகள். 6 அவள் வருகிறாள். நாணிக் கோணி நிற்கிறாள். சிறிது நேரம் அவளையே விழுங்குகிறான்- பார்வையால்!" தங்கம் " என்கிறான் ; நா குழறுகிறது. உதடுகள் உலர்ந்துவிடுகின் றன. நடுங்கும் கரங்களால் அவள் கையைப் பற்றுகிறான். அவள் நகர்கிறாள். எழுகிறான். தோள் தழுவுகிறான். இருவரும் அமர்கிறார்கள். அவள் அவன் பிடியிலிருந்து நழுவ முயல்கிறாள், அவன் விடவில்லை. அந்த இன்ப வம்பில் அகல் விளக்கு கீழே சாய்கிறது. அறை இருளாகிறது... அவன் விழித்துப் பார்க்கிறான். கண்டதெல்லாம் கனவு. எதிரே போலீசார் நிற்கிறார்கள். கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு பார்க்கிறான். ஆம்; போலீசார்தான் ! அய்யோ ! ' என அலற நினைக்கிறான். தொண்டை அடைத்துக் கொள்கிறது. 6 6 டேய்! பண்ணையார் கொலை சம்பந்தமாக உன்னைக் கைது செய்கிறோம் ” என்று பயங்கரமாகக் கூச்சல் எழுப்புகிறார் சப் இன்ஸ்பெக்டர். அவனிடமிருந்து பதில் இல்லை. கைகளில் விலங்கு மாட்டப்படுகிறது. இழுத்துச் செல்லப்படுகிறான். கல்யாணக் கனவை நினைத்துப் பார்த்து ஏங்கவோ அல்லது இன்ப மடையவோ கூட அவனுக்கு நேரமில்லை. 'லாக் அப்'பில் போட்டு அடைத்து விடுகிறார்கள். பரந்த வெளியில் வீசுகின்ற விலை யில்லாத தென்றலை அனுபவித்துக் கொண்டிருந்தவனை அடிமை யாக்கிப் புனுகுப் பூனைக் கூண்டு போன்ற அசுத்தமான ஓர் ரிமாண்டு அறையில் தள்ளிவிடுகிறார்கள். மறுநாள் சொல்லப்பட்டு, சப்ஜெயிலில் பதினைந்து நாள் இருக்கவேண்டு மென்று உத்திரவு! எனச்