பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 109

மரவம் இருக்கையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தக்

குரவமுறுவல் செய்யும் குன்றிடம் சூழ்தண் சாரல் குறும்பலாவே, என்று குறும்பலாவையும் பாடியிருக்கிறார். நாவுக்கரசர், குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளர்? என்றே கேட்கிறார்.

மணிவாசகரோ,

உற்றாரை யான் வேண்டேன்

ஊர்வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன்

கற்பனவும் இனியமையும் குற்றாலத்தமர்ந்து உறையும்

கூத்தா உன்குரை கழற்கே கற்றாவின் மனம் போலக்

கசிந்துருக வேண்டுவனே

என்ற கசிந்து கசிந்து பாடியிருக்கிறார். கபிலரும்

பட்டினத்தடிகளும் குற்றாலத்தானை நினைந்து பாடிய பாடல்களும் உண்டு.

இத்தலத்தில் நிறைய கல்வெட்டுக்கள் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட பரகேசிவர்மன் என்னும் முதல் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு சோழ நாட்டுடன் இணைந்திருக்கிறது. இன்னும் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம் பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்திய நிபந்தங்களையெல்லாம் குறிக்கும் கல்வெட்டுகள் உண்டு. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல திருப்பணிகள்’ செய்திருக்கிறான். இப்படிச் சோழரும் பாண்டியருமாகக் கட்டிய கோயிலை, சொக்கம்பட்டி குறுநில மன்னர்களும் விரிவுபடுத்திப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குழல்வாய் மொழி அம்மை கோயிலைத் தேவகோட்டை காசி விசுவநாதன் செட்டியார் குடும்பத்தினர் திருப்பணி செய்திருக்கின்றனர். கோயிலில் திருப்பணி வேலைகளை இப்போதும் செவ்வனே செய்து வருகின்றனர்.

இக்கோயிலை விட்டு வெளியே வந்ததும் நேரே ஊர் திரும்ப முடியாது. கோயிலுக்கு வடபுறம்தான் இத்தலத்தில் பிரசித்தி பெற்ற