பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

வீணாதர தகவிணாமூர்த்தி

தகழி ணாமூர்த்தத்தில் எத்தனையோ வகை, யோக தகழிணாமூர்த்தி, வீணாதர தகதிணாமூர்த்தி என்றெல்லாம். கலைக் கூடத்தில் தகதிணாமூர்த்தியும், யோக தகழிணாமூர்த்தியும் கல்லுருவில் இருக்க, வீணாதரர் மட்டும் செப்பு உருவிலே உருவாகி இருக்கிறார்.

இறைவனே இசை வடிவினன். ஏழிசையாய் இசைப் பயனாய் இருப்பவன் அவன். தும்புரு நாரதர் சுகர் முதலியவர்களுக்குக் கூட இசையைக் கற்பித்தவன், சாமவேதத்தை வீணையில் ஏற்றிப் பாடி இப்படி இறைவன் தன் கையில் வீணையேந்தி வாசித்ததைக் கற்பனை பண்ணியருக்கிறார் ஞானசம்பந்தர். வேயுறு தோளிபங்க னாகவும், விடமுண்ட கண்டனாகவும் உள்ளவரே மிக நல்ல வீணை தடவி இன்னிசை பொழிகிறார் என்பார். ஒசை ஒலியெலாம் தானே ஆன அவன், வீணாதரனாக காட்சி கொடுப்பதும் பொருத்தம்தானே.

ஏன் இவன் வீணை வாசிக்கிறான்? சொல்லால், முத்திரையால் விளக்க முடியாததையும் விளக்கும் ஆற்றல் இந்த இசைக்கு உண்டு என்றுதானா? துடிமுழக்கி, தன்பக்கம் உயிர்களை சேர்க்க முயன்றிருக்கிறான். நடம் ஆடி உயிர்களுக்கு ஒரு ஆசை ஊட்டியிருக்கிறான். மேலும் வீணை வாசித்து அந்த நாத வெள்ளத்திலே மிதக்கப் பண்ணி பவமாகிய கடலைக் கடக்க உதவியிருக்கிறான், எல்லாம் உயிர்கள் மாட்டுக் கொண்ட அபரிமிதமான கருணையால்தான்.

கலைக்கூடத்தில் உள்ள செப்புச் சிலையை திரிபுராந்தகரோ என்று மயங்கியவர்கள் உண்டு. வீணையேந்தும் கரத்திற்கும், வில்லேந்தும் கரத்திற்கும் உள்ள வேற்றுமையை மட்டும் உணரும் ஆற்றல் பெற்றிருந்தால், இந்த மயக்கம் வேண்டியதில்லை. அத்துடன், இந்த முயலகன் இருக்கிறானே அவன், நடனராஜன் காலடியிலும் தென்முகக் கடவுள் காலடியிலும் மட்டுந்தான் கிடப்பான். திரிபுராந்தகரைக் கண்டு அஞ்சமாட்டான், அவர் காலடியில் அகப்படமாட்டான். இதை வைத்தும் இவர் விணாதரரே என்று அறுதியிட்டுவிடலாம்தானே. நல்ல சோழர் காலத்துச் செப்பு விக்ரஹம் மிக்க அழகோடு அமைந்தது.