பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்திமதி
தாயே வருக!


வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மைஎழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்

பேராதரத்தி னொடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதுாட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தம்இடேன்
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்

தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே!


காந்திமதியம்மை பிள்ளைத் தமிழில் உள்ள வாரானைப் பருவத்திலிருந்து ஒரு பாடல்.