பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ரிஷி பத்தினிகள்

கலைஞனுக்குத் தன் கற்பனையை வெளியிட இந்த இந்தப் பொருள்தான் வேண்டும் என்று இல்லை.

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி

மாடும் அற்புதப் பொருளாம் வண்டி பூட்டும் கயிறும் - என்றன் மனதிற்கு அற்புதப் பொருளாம் என்று அவன் சொல்வதில் வியப்பில்லைதான்.

என்றாலும், கலைஞன் வளர்த்தது காதலையும் வீரத்தையும், போற்றியது பெண்ணையும் அவள் அழகையும். பெண்களும் காதலும் இல்லாவிட்டால் இவர்கள் கற்பனையெல்லாம் சிறகடித்துப் பறக்க முடியுமா என்ன? இப்படிப்பட்ட கலைஞன் ஒருவனுக்கு ஒரு கதை கிடைக்கிறது ஒரு புராணத்திலே, தாருகாவனத்தில் அற்புத சுந்தரனாக வந்த அந்த பிக்ஷாடனரது அழகிலே அங்குள்ள ரிஷி பத்தினிகள் மயங்கி நிறையழிந்தனர் என்று.

வளை சுழன்றது சிலருக்கு உடை நெகிழ்ந்தது பலருக்கு. நாணம் வந்தது நங்கைக்கு. மலர்ப்பாணம் தைத்தது மங்கைக்கு என்றெல்லாம் தோன்றிற்று இவனுக்கு சொல்நலம் கடந்த காமச் சுவையைப் பல் உருவம் ஆக்கி, இந்நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நிற்கும். இவர்தம் நிலையெல்லாம் கல்லிலே உருப்பெறுகிறது பின்னால், இவர்களில் ஒருத்தியின் உடை நெகிழ்கிறது; தன்னையும் தாங்கலாத அவள் துயில் ஒன்றும் தாங்கி நிற்க அரும்பாடு படுகிறாள். ஒசிந்த நோக்கோடும், முகிழ்த்த முரலொடும் நாணி நிற்கிறாள் ஒருத்தி தன் நாணத்தை மறைக்க, நாணிக் கோணும் இவள் பின்னால் மறைகிறாள் மற்றொருத்தி. இருவரையும் உருவாக்குகிறான் சிற்பி இருவரது அழகையும், இவர்களைச் சேர்ந்த இன்னும் ஐந்து ரிஷி பத்தினிகளின் நிலையையும் காண்பதற்கு நேரே கலைக்கூடம் செல்லுங்கள் இன்றே, என்று சொல்லுவதைத் தவிர வேறு சொல்ல என்னால் இயலவில்லை.