பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கலைமணி பாஸ்கர தொண்டைமான் SuS

பி. ரீ

பெயரைச் சரியாக எழுதவும் மறந்தாய். இக்கலைவினோதரைப் பற்றி என்ன எழுதிவிடப் போகிறாய்?

பிபின் சந்திரபால் (பிபின் சந்திர பாலா) என்ற தீவிர தேசியத் தலைவரின் பிரபலமான பெயரைச் சந்திரபியின் பால் என்று மாற்றி, முன்பின்னாக எழுதினானாம் ஒரு வெள்ளைக்காரன். அந்த நாளிலே, தலைப்பைப் பாாத்ததும் இப்படியெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசி நகையாடினார் நண்பர் அவசர மூர்த்தி.

அப்போதுதான் எனக்கும் அது புலப்பட்டது. ஆனால் சமாளித்துக் கொண்டேன். சங்ககாலத்தில் வாழ்ந்த தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர் இவர் என்றேன். 1964 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதியிட்ட கலைமணியின் மணிவிழா மலரில் எங்கள் பரம்பரை என்ற தலைப்பில் இவர் அருமைப்புதல்வி அன்புடன் தந்திருக்கும் அச்செய்தியை ஆதாரமாகக் காட்டினேன்.

உண்மை என்னவென்றால், கலை வளர்த்த தொண்டைமான்களில் எமக்குத் தெரிந்த அளவில் ஆதித்த தொண்டைமான் பெயர், தொண்டைமான் இளந்திரையன். அந்தக் காவலனையும் நாவலராகவும், பாவலராகவும் திகழ்ந்த கலைமணியின் தந்தையாரையும் தாத்தாவையும் நினைவூட்டிக் கொண்டேன்.

அவசர மூர்த்தியோ, வழிவழிச் சொத்தா இந்தக் கலைமணியின் கலையுள்ளம்? என்ற வியப்பில் மூழ்கி மேலே எழுதும்படி உத்தரவு போட்டுத் தாம் மெளனமாகிவிட்டார்.

எப்படியும் இது பரம்பரைச் சொத்து. ஆனால் இந்தச் சிற்பக் கலை ரசிக உள்ளம் பேசும் கல்சிலைகளுக்கும், செம்பு வெண்கல பொன் படிமங்களுக்குமிடையே பயிற்சியும், பல அனுபவங்களும்