பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

சொற்றொடரைத் தலைப்பாக வைத்துப் பேசினார். சொற்பொழிவு களும் முடிந்தன. வள்ளுவன் சொன்ன வாக்கும் பலித்தது.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்.”

அன்று முதல் இன்று வரை, திரு. தொண்டைமான் அவர்கள்

என் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார். என் இல்லத்தில் நடைபெற்ற என் புதல்வியின் திருமணத்திற்குத் தலைமை தாங்கி அதை ஒரு தமிழ்த் திருமணமாகவே நடத்தும் உறவினராகவே மாறிவிட்டார்.

திரு. தொண்டைமான் அவர்களை நன்கு அறியும் வாய்ப்பு

1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை அமைந்தது. அடியேனும் என் உற்ற நண்பர் கோவை திரு. கே. ஆர். இராதாகிருஷ்ணனும், திரு. தொண்டைமான் அவர்களும், ஓர் அகில இந்திய சுற்றுப் பிரயாணத்தைக் காரிலேயே மேற்கொண்டோம். சுமார் 10,000 மைல்கள் சுற்றினோம். இந்திய நாட்டின் கலைச் செல்வங்களைப் பார்ப்பதும், சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரங்களைக் காண்பதும், தமிழ் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுவதுமே எங்கள் நோக்கமாக அமைந்தது. அந்த அறுபது நாட்களை எங்கள் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நாட்களாகச் செய்தவர் திரு. தொண்டைமான் அவர்களே. திருவாசகத்தின் ஒரு வாசகத்தை இங்கு குறிக்கிறேன்.

“காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி

தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி”

என்பது போல காண்பதற்கு அரிய இந்திய நாட்டையே காட்டிவிட்டார். ஒன்றுக்கும் பற்றாத எங்களையும் உடன் அழைத்துப்போய், இந்திய நாட்டின் பழம்பெரும் செல்வங்களாகிய, அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ, கோனாரக், புவனேஸ்வர், தில்வாரா ஆலயங்கள் இவற்றைக் காட்டியபோது நாங்கள் பெறுதற்கு அரிய பெரும் பேற்றை பெற்றதாகவே கருதினோம். கலையின் வாசனையையே அறியாத எங்களையும் கலைஞர்களாக்கிய பெருமை அவர்களையே சாரும்.

மானிடம் பாட விரும்பாத கவிகள் உலகில் எத்தனையோ பேர். எனக்கும் அதேபோல் யாரையும் மிகைப்படுத்திப் பேச