பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கலைச் செவியர் தொண்டைமான்

–)-–

O திருலோக சீதாராம்

பாஸ்கரத் தொண்டைமான் நம்மிடையே வாழ்கின்ற கலைச் செவியர். கற்சிலைகள் அவருக்குக் கூறுகின்ற கோடி கோடிச் செய்திகளைக் கோமளமான தமிழில் அவர் நமக்குக் குழந்தைகளுக்குச் சொல்வது போலச் சொல்லி வருகிறார்.

சிறு பிராயத்திலிருந்து அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்றால், அவர்களை ஓர் அந்நிய பாவத்துடன் பார்ப்பது ஒரு இயல்பாக எனக்கு இருந்து வந்தது. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்துப் பேசிய போதுதான் என்னுடைய அறியாமை நீங்கிற்று. மிகச் சிறந்த கர்மயோகி. கவிஞர், உல்லாச புருஷர், இவ்வளவுக்கும் மேலாகக் கலைஞர் என்று அவரைப் புரிந்துகொண்ட போதுதான் நான் பெரும்பேறு பெற்றேன் என்றும் அறிந்து கொண்டேன்.

கந்தர்வ கானம் என்ற சிறு காப்பியம் ஒன்றை நான் எழுதி முடித்து, அன்றிரவே புறப்பட்டு, தஞ்சைக்குச் சென்று, தொண்டைமான் அவர்கள் வீட்டு வாசலில் காத்திருந்தேன். கலைக்கூடம் வேலையாக அலைந்துவிட்டு, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அவர் வந்து சேர்ந்தார். வாசற்படியிலே மறித்துக் கொண்டேன். ஆயிரம் வரிகளுக்கு மேல் நீண்டுள்ள அந்தக் காப்பியத்தை அவருக்குப் பாடிக் காட்டிய போது, அவ்வளவையும் ரசித்துக் கேட்டு விட்டுப் பின்னரே வீட்டுக்குள் சென்றார். கவிஞர்களிடமும், கவிதையிடமும் அவருக்கிருந்த பரிவுக்கு வேறு அத்தாட்சி வேண்டியதில்லை.

,