பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக் களஞ்சியம் 19


இப்படி வந்து நின்ற விவரம் சோழனுக்குத் தெரிய வந்தது. விஷயம் தெரிந்துவிட்டது. கடற்கரைக்கு வந்து தொண்டைமாலை அணிந்திருந்த குழந்தையைப் படகிலிருந்து மெள்ளக் கையால் அணைத்தெடுத்து அரண்மனைக்குக் கொண்டு போனான். செல்லமாக வளர்த்து வந்தான் குழந்தையை.

குழந்தைக் காளைப் பருவம் அடைந்ததும், அரசன் தன்னுடைய ராஜ்யத்தின் வடபகுதியைத் தொண்டைநாடு என்று பெயரிட்டு அதற்கு அந்த மகனை அரசனாக்குகிறான். அவனுக்குத் தொண்டைமான் என்னும் பட்டமும் அளித்தான்.

தமிழ்நாடு இந்து தேசத்தின் தெற்குக் கோடியில் இருந்ததால் கொஞ்சம் செளகரியமாகவே காலம் தள்ளிற்று. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், காவிரிப்பூம்பட்டினம் இவற்றை முக்கிய நகரங்களாகக் கொண்டு, காவிரி ஆற்றின் வளத்தினால் செளகரியமாய் வாழ்ந்து வந்தது சோழநாடு. கொற்கை ஆகிய நகரங்களைக் கொண்டு, வைகை, தாமிரபரணி நதிகளின் வளத்தினால் பாண்டி நாடும் வளமாகவே இருந்தது. -

அப்படியே கொச்சி, பாலக்காடு முதலிய நகரங்களோடும் பெருமிதமான வளத்தோடும் சேர நாடும் செளகர்யமாய் இருந்து வந்தது. -

ஆனால் தொண்டைநாட்டின் காரியம் வேறு. காஞ்சிபுரம், மயிலாப்பூர், மாமல்லபுரம், தொண்டை நாட்டுக்குரிய நகரங்கள். நீர் வளம், நிலவளத்துக்கும் குறைவில்லைதான். அனாலும் வடநாட்டிலிருந்து படையெடுப்பும் கொள்ளையும், அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தன.

இது காரணமாகத் தொண்டை நாட்டர்கர்கள் சேனைகளைச் சரியான முறையில் தயாராக வைக்க வேண்டியிருந்தது. அது நல்ல யுத்தப் பயிற்சியைக் கொடுத்தது தொண்டை நாட்டாருக்கு.

யுத்த வீரர்களும், தளவாடங்களும் தொண்டை நாட்டில் இருந்தது போல, வேறெங்கும் இருக்கவில்லை.