பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 227.

வசதியாகப் போய்விட்டது. மாணவர் சங்கப் பணியைத் தொடர்ந்து நடத்த முடிந்தது. அதன் மூலம் பேச்சுத் திறன் வளர்ந்ததோடு, மற்றவர்களும் பேசிப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நான் சிறுமி, கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் உடன் அழைத்துப் போவார்கள். அந்த வாசனைதானோ என்னவோ நானும் அதிகப்

பிரசங்கியாகிவிட்டேன்.

மாணவர் சங்க சார்பிலே நடத்திய பெரும் விழா கம்பன் விழாதான். முதன்முதலாக திருநெல்வேலியில் கம்பனுக்கு விழா எடுத்த பெருமை தொண்டைமான் அவர்களையே சாரும். “காரைக்குடி கம்பன் விழா எல்லாம் அதற்குப் பின்னர் ஏற்பட்டதுதான். திரு. டி.கே.சி தலைமையிலேயே கம்பன் விழாவை நடத்தினார்கள். வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவையும் தொண்டைமானும், திரு. அருணாசலக் கவுண்டரவர்களுமாகச் சேர்ந்துக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள், டாக்டர் மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் தலைமையிலே. இப்படிப் பெரிய பல விழாக்களை நடத்தியதும், விழாக்களிலே பேசிப் பழகியதும்தான். பிற்காலத்தில் அவர்கள் நடத்திய பல கலை விழாக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

தொண்டைமானுடைய பேச்சே ஒரு தனி பாணி, மேடையில் ஏறியதும் சபையை ஒரு நோட்டம் விடுவார்கள். சபையின் போக்கைப் புரிந்துகொள்வார்கள். பேச ஆரம்பித்ததுமே, சபையைத் தம் வசப்படுத்திக் கொள்வார்கள். சபை வசமானவுடன், விஷயத்தை விளக்குவது எளிதாகிவிடும். கேலி, கிண்டல், துகடாக் கதைகள் இப்படியாக விஷயத்தை நமக்குப் புரிய வைத்து விடுவார்கள். அந்த ஜால வித்தையிலே மயங்கிச் சபையும் மெய்மறந்து கேட்டிருக்கும். கலையைப் பற்றியோ, கம்பன் கவிதையைப் பற்றியோ பேச ஆரம்பித்து விட்டார்களானால் ஒரே கும்மாளிதான். நேரம் போவது பேசுகிற அவர்களுக்கும் தெரியாது. கேட்கிற சபையோருக்கும் தெரியாது. எடுத்துக்கொண்ட பொருளை அவர்கள் கையாளுகிற விதமே அலாதி. காதலாகட்டும், வீரமாகட்டும், சோகமாகவே இருக்கட்டும், அந்தந்த ரசானுபவத்திலே திளைத்து நம்மையும் திளைக்கச் செய்து விடுவார்கள். ரசிகமணியிடத்திலே கற்றுக்கொண்ட வித்தை அது. ‘கடவுள் சிரிக்கிறார்’, ‘கம்பனுடன் இரண்டுநாள்’, ‘ஏது அவனைப் பாடும் பரிசு என்று புதிர்களாகவே தலைப்பும் கொடுப்பார்கள். தலைப்பைப் பார்த்தவுடனேயே மக்களுக்குப் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தானாகவே ஏற்பட்டு விடும்.