பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 229

தமிழ்நாட்டிலே தொண்டைமான் போகாத ஊரில்லை, பேசாத மேடையில்லை. திருச்சி, பவானி, ஈரோடு, கோவை, தென்காசி இவை எல்லாம் அவர்கள் அடிக்கடி போகிற இடங்கள். அங்கெல்லாம் தொண்டைமான் பேச்சை விரும்பிக் கேட்கும் பெருங்கூட்டமே உண்டு. சில பேச்சாளர்களைப் போல் எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி, தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் போர் அடிக்கிற வழக்கமே அவர்களிடம் கிடையாது. எழுதுவதைக் காட்டிலும் பேசுவதையே அதிகமாகத் தொண்டைமான் விரும்புகிறார் என்றால் அது மிகையல்ல. எப்படிப்பட்ட சோர்வையும் பேச்சு போக்கிவிடும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் உடல் நிலையைக் கூட பாராட்டாமல் ஊர் ஊராகச் சென்று உரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

எழுத்துலகில் கிட்டத்தட்ட முப்பது அண்டுகளுக்கும் மேலாகவே ஈடுபட்டிருக்கிறார்கள். இலக்கியக் கட்டுரைகள் எத்தனை எத்தனையோ எழுதியிருக்கிறார்கள். தம்முடைய நண்பரான, கானுகோ சங்கரலிங்கம் பிள்ளையவர்களைப் பற்றி பிள்ளைவாள்’ என்ற தலைப்பிலும் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களைப் பற்றி தமிழ் அறிஞர் முதலியார் என்ற தலைப்பிலும், ஐயா டி.கே.சி அவர்களைப் பற்றி ரசிகமணி டிகேசி என்ற தலைப்பிலும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எழுதிய முதல் கலைக் கட்டுரை கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பற்றியது. 1939 ஆம் வருஷம் ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் அதை வெளியிட்டுப் பாராட்டினார் பேராசிரியர் கல்கி அவர்கள். அதிலிருந்து தான் கலைக் கட்டுரைகள் எழுதும் பழக்கமே உண்டாயிற்று என்று சொல்லிவிடலாம்.

தமிழே முச்சாக வாழ்ந்த தொண்டைமானை, அரசாங்கம் ஓராண்டு காலம், தமிழறியா தலைச்சேரிக்கு மாற்றிவிட்டார்கள். டி.கே.சியும் வட்டத்தொட்டியும் போகாத ஒரு இடம் உண்டெனில் அது திரு தொண்டைமான் அவர்கள் பணியாற்றிய தலைச்சேரிதான். தமிழ் புகழே தான் பேசி, தமிழ்ப் பணியே தான் புரிந்து வந்த தொண்டைமான், தலைச்சேரியிலும் சும்மா இருக்கவில்லை. தமது அனுபவத்தையெல்லாம் கடிதமாக, கவிதையாக, ரசிகமணியவர் களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் பிறந்த நெல்லைநகர்

தனில் பிறந்த தமியனையே அமிழ்தனைய மொழியறியா

அயல் நாட்டிலிரு என்றால்