பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தெரிந்திருக்க வேண்டுமே. மாவட்ட நிர்வாகப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டு, எழுத்துக்கும் பேச்சுக்கும் எப்படியோ அவகாசம் ஏற்படுத்திக் கொள்கிறாரே. அவரிடம் பணியாற்றுகிற உங்களுக்குப் பத்திரிகை படிக்கக்கூட அவகாசம் இல்லை என்பது விந்தையாக இருக்கிறது” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாா.

ஆம். ஐ.ஏ.எஸ் தேர்வுக் குழுவினர் கூட திரு. தொண்டைமான் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரசாங்கப் பொறுப்புக்களைக் கவனித்த பின்னர், கிடைக்கின்ற அவகாசத்தையெல்லாம் தமிழுக்கும் கலைக்கும் அர்ப்பணிக்கிறார் என்ற உண்மையை அறிந்துதான் இருந்தார்கள்.

சுமார் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக ரெவினியு இலாகாவிலே கலெக்டர் ஆபிஸ் குமாஸ்தாவாக தமது சர்க்கார் ஊழியத்தைத் தொடங்கினார்கள் திரு. தொண்டைமான் அவர்கள். அதிலிருந்து, தமது திறமையாலும், அறம் திறம்பா தன்மையாலும் படிப்படியாக உயர்ந்து வடஆற்காடு மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி, அதன் பின்னரே ஓய்வு பெற்றார்கள். சிலரைப் போல வேலை வேலை என்று இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிஸ் பைல்களைக் கட்டிக்கொண்டு அழுகிற பழக்கம் அவர்களிடம் கிடையாது. அதற்காக ஆபிஸ் அலுவல்களை நாளைக்கு, மறுநாளைக்கு என்று சிவப்பு நாடாவால் கட்டிப்போடுகிற பழக்கமும் கிடையாது.

அதிகாலை மணி 4.00 ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நேரம். ஆபிஸ் அறையிலிருந்து தட், தட்’ என்று சத்தம் வரும். என்ன சத்தம் என்று கண்ணைத் திறந்து, மெதுவாய் எட்டிப் பார்த்தால் விஷயம் தெரியும். முந்திய தினம் இரவு ஆபிசிலிருந்து வந்த பைல்கள் பைசலாகிக் கொண்டிருக்கின்றன என்று. காலை 6 மணிக்குள் ஒன்றிரண்டு பைல்களைத் தவிர மற்றவை பைசலாகிவிடும். அதன்பின் காபி, பத்திரிகை, குளியல், பேட்டி, பலகாரம் எல்லாவற்றையும் அடுத்தடுத்து ஒன்பது மணிக்குள் முடித்துவிட்டு அலுவலகத்துக்கும் கிளம்பி விடுவார்கள். குமாஸ்தாவாக இருந்தபோதும் சரி, கலெக்டராக இருந்தபோதும் சரி இதே நியதிதான். சாயங்காலம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் அப்புறம் சில மணி நேரங்களுக்கு ஆபிஸையும் பைல்களையும் மறந்தே விடுவார்கள். தமிழ், கலை இவற்றிலே கவனம் திரும்பிவிடும். நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகள், அங்கங்கே பிரசங்கங்கள் எல்லாம் முடிந்து வீட்டுக்கு வரும் போது