பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றோடு பொருந்திய பல கதைகளை விசாரித்து அறிந்து நயமாகச் சொல்கிறார். செம்பியன் மாதேவியின் வரலாறு, வடுவூருக்கு ராமன் வந்த கதை, தஞ்சையில் தளிக்குளத்தும் பெருமான் பெரிய கோயிலைப் பெற்றது, கிழவி நிழலில் பெருவுடையார் எழுந்தருளியது, துலுக்க நாச்சியார் சரிதை, பவானியில் காரோ என்ற ஆங்கிலேயர் வேதநாயகியை வணங்கியது முதலியவற்றைக் காண்க. -

கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள், கோயில் கட்டிய மன்னர்களின் பெருமை, புராணங்களில் வரும் வரலாறுகள், கர்ண பரம்பரைச் செய்திகள், தலத்தின் பெருமையைப் பற்றிய பாடல்கள் முதலிய பலவற்றையும் கோவையாக இணைத்துப் படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் ஒடுகின்றன. அந்த ஓட்டத்தைத்தானே விறுவிறுப்பு என்று இக்கால எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்?

இந்தப் புத்தகத்தைக் கோயிலுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும். போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும். புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும். சரித்தர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்ற வைத்துவிடுவோம். பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால்தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்துவிடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. காசு இல்லாமல், பிரயாண அலுப்பு இல்லாமல், தேங்காய்ப் பழம் இல்லாமல் இந்தப் பயன் நமக்குக் கிடைக்கிறது. நாம் அங்கே போய் தரிசித்தாலும் இத்தனை விவரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

நாவுக்கரசருக்குத் திருவையாற்றில் சிவபெருமான் கைலத் தரிசனம் காட்டியதை, இந்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம் டெலிவிஷன் எக்ஸ்பர்ட் ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான். நம்மிடையே அவன் யார்? என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார். நாவுக்கரசராவது திருவையாற்றுக்குப் போய்க் கைலைக் காட்சியைக் கண்டார். நாமோ இருந்த இடத்தில்