பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 (

பாரதி ரகுநாதன்

—~—

விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பத்திரிகைத் துணை ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அமைப்பாளர் எனப் பல துறைகளிலும் காலூன்றி நின்று, தமது படைப்புகளின் வழியாகத் தமிழன்னைக்கு மகுடம் சூட்டிய பெருமை தொமுசி ரகுநாதனுக்கு மட்டுமே உண்டு.

1941 இல் பிரசண்ட விகடன் என்ற பத்திரிகையில் தமது சிறுகதையின் வழியாக இலக்கிய உலகத்திற்கு அறிமுகமான தொமுசி, 199 இல் வெளிவந்த புதுமைப்பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் என்ற நூலுடன் தமது 58. ஆண்டு கால எழுத்துப் பணியை ரகுநாதன் நிறத்திக் கொண்டாலும் தமது இறுதி மூச்சுள்ள வரை பாரதி புகழ்பாட மறந்ததில்லை.

தொமுசியின் காவியப்பாவை கவிதைக்கும், பஞ்சும் பசியும் நாவல், இலக்கியத்துக்கும், பாரதி காலமும் கருத்தும் நூல் ஆய்வுக்கும், தாய் நூல் மொழிபெயர்ப்புக் கலைக்கும் பரிசுகளும் விருதுகளும் பெற்றுப் பாராட்டப்பட்ட படைப்புகள்.

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகளை மன்னர் மகன் என்றும், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும், பன்னெடுங்காலமாகச் சொல்லிவந்த கதைகளையும், ஆய்வாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் நிராகரித்து, இளங்கோவடிகள் வணிகக் குலத்தில் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் யார்? என்ற நூலில் மெய்ப்பித்தவர் தொ.மு.சி. ரகுநாதன். இந்த நூலுக்கு இதுவரை யாராலும் மாற்றுக் கருத்தை முன்வைக்க முடியவில்லை. ஈரோட்டில் அவருக்கு 2001 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.

தொ.மு.சியின் ஈரோடு வருகை பற்றிய ஒரு நேர்முக வர்ணனை 2001 டிசம்பர் 10.