பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

உரிமையைத் திருடுகின்ற, சட்டப்பூர்வமாய்ச் சுரண்டுகின்ற இந்த வழக்கம் ஒழிய வேண்டும். இந்த எண்ணத்திலிருந்து பாரதியின் சரணங்கள் பிறக்கத் தொடங்குகின்றன. வாழ்கின்ற பாரத சமுதாயத்தில்,

மனிதர் உணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ? - புலனில் வாழ்க்கை இனியுண்டோ? - நம்மிலந்த

வாழ்க்கை இனியுண்டோ?

ஆம். மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வாழ்க்கை மனித வாழ்க்கையில்லை. அது புலனில்லாத, உணர்ச்சியில்லாத, அறிவில்லாத விலங்கு வாழ்க்கை, வாழ்கின்ற பாரத சமுதாயத்துக்கு அத்தகைய வாழ்க்கை உதவாது. எனவே அந்த வாழ்க்கை முறையை நாம் விட்டொழிக்க வேண்டும். “சரி, இந்த உலகத்தில் சிலர் வாழப் பலர் வாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்குக் காரணம் சுரண்டல் முறை மட்டும்தானா? உலகத்தில் எல்லோருக்கும் உணவு வழங்கக் கூடிய அளவுக்கு உலகில் உணவு உற்பத்தியுண்டோ? இயற்கை நமக்குப் போதுமான உணவை வழங்குவதில்லையே. எனவே வறுமை என்பதே இயற்கைத் தாய் விதித்த தவிர்க்க முடியாத தலைவிதிதான்” என்று சிலர் வாதம் பேசுவதும் பாரதியின் காதில் விழுகிறது. உடனே அவனுக்கு ஆத்திரம் பிறக்கிறது. பாரத பூமி அப்படியொன்றும் மலடு தட்டிப் போய்விடவில்லை என்று சுட்டிக்காட்ட முனைகிறான்.

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

எண்ணரும் பெருநாடு கனியும் கிழங்கும் தானியங்களும்

கணக்கின்றித் தரும் நாடு - இது கணக்கின்றி தரும் நாடு - நித்தநித்தம்

கணக்கின்றித் தரும் நாடு. எல்லோருக்கும் எல்லாம் என்றதும் எல்லோருக்கும் அரை வயிறு என்று அர்த்தமில்லை. அரை வயிறு உண்ண வேண்டிய அவசியமு மில்லை. ஏனெனில் பாரத நாடு வற்றாத செல்வ வளத்தைத் தரக் கூடியது. அதுவும் ஏதோ சீசனுக்குச் சீசன் தருகின்ற நாடு என்று எண்ணவேண்டாம். நித்த நித்தம் தருகின்ற நாடு. எனவே இந்த நாட்டில் பஞ்சமும் வறுமையும் என்றால், அதற்குக் காரணம் நம்மிடமுள்ள மனிதர் உணவை மனிதர் பறிக்கும், மனிதர் நோக மனிதர் பார்க்கும் புலனில் வழக்கம்தான். ஆதலால் இந்த