பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

மறுநாள் காலையில் எஞ்சினியரைக் கூப்பிட்டு அனுப்பினேன். ஆமாம், இந்த வேலையை வட்டார அபிவிருத்தி வேலையாகச் செய்ய வேண்டாம் ஜில்லா போர்ட் வேலையாகச் செய்ய ஏதாவது ஆக்ஷேபனை உண்டா? என்றேன். ஆக்ஷேபணை இல்லை. ஆனால் அதற்குரிய எட்டாயிரம் ரூபாயை ஜில்லா போர்டிலிருந்து கொடுத்தல் இயலாதே என்றார். சரி, எஸ்டிமேட்டை என்னிடம் கொடுங்கள் என்றேன். கிராமத்துக்காரரில் ஒரு பெரிய பிரமுகரைக் கூப்பிட்டனுப்பினேன். அவரிடம் கண்டிராக்டை ஒப்புவிப்பதாகச் சொன்னேன். கிராமத்தார் சேர்த்து வைத்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் பெறுமான கற்களையும் எடுத்துக்கொண்டு, ஜில்லா போர்டிலிருந்து ரு 4000 மும் பெற்றுக் கொண்டு வேலையை முடியும் என்றேன். அப்படியே வேலையும் இரண்டு மாத காலத்தில் முடிந்துவிட்டது. பாலத்தின் திறப்பு விழாவையும் ஜாம் ஜாம்’ என்று நானே முன்னின்று நடத்திவிட்டேன். இதையெல்லாம் பார்த்த எஞ்சினியர் சொன்னார் “சார், நாங்கள் எல்லாம் காலுக்குத் தக்கபடி செருப்பைத் தறி” என்றோம். தாங்களோ செருப்புக்குத் தக்கபடி காலைத் தறி என்று சொல்லிக் காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்று குறைபட்டுக் கொண்டார். “சரிதான் ஐயா! சிவப்பு நாடாவை வெட்டித் தள்ளத் தெரியவேண்டும். அதற்கு மனிதாபிமானம் வேண்டும். அந்த மனிதாபிமானம் உடையவர்களாய் அதிகாரிகள் வாழ வேண்டும். அதுவே வெற்றியின் ரகசியம்” என்றேன். ஒரு நல்ல காரியத்தை எப்படியோ செய்து முடித்தோம் என்ற திருப்தி இருந்தது எனக்கு. அது போதாதா?

இன்னும் ஒரு சந்தர்ப்பம் - நான் வேலை பார்த்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தோல் பதனிடும் தொழில் சிறப்பாக நடந்தது. அங்கு முதலாளிமார் எல்லாம் முஸ்லிம் சகோதரர்கள். கூலி வேலை செய்பவர்கள எல்லாம் ஹரிஜனங்கள் இருவருக்கும் இடையே எவ்வளவோ தகராறுகள். பல வருஷங்களாக போனஸ்’ கொடுபடவில்லை. இதற்கெல்லாம் தொழிலாளிகள் லேபர் கோட்டுக்குப் போவார்கள். அவர்களுக்கு அனுகூலமாகத் தீர்ப்புக் கூறப்படும். அதை எதிர்த்து முதலாளிகள் அப்பீல் பண்ணுவார்கள். அப்பில் முடியும்வரை தொழிலாளர் குறைகள் நீங்காது. இந்த நிலையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்றிலிருந்து வேலை நிறுத்தம் பண்ணப் போவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அக்கிராமத்தில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படலாம் என அரசியல்வாதிகள் பீதியை வேறே கிளப்பிவிட்டுவிட்டனர். நான்