உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மறக்க வழிதேடிக் கொள்வதுபோல ஒரு கூட்டத்தாருக்கு இசையுணர்வு அமையுமேயானால் அது அநீதி. கஞ்சாவும், அபினும்போல், மக்கள், வாழ்வினிலே தாழ, இசை துணை யாகுமேயானால் அந்த இசை, உயர்ந்த கலையென்றாலும் வெறுக்கப்பட வேண்டியதேயாகும். இசை மருந்தல்லவே, 'மருந்தைப்போல மட்டும் பயன்படுத்த என்பர். அது ஒரு மருந்தாகவும் இருக்கிறது என்பதை அறிஞர் ஒப்புவர். அது மருந்து மட்டுமலல என்பதை, நான் ஒப்புகிறேன். ஆனால் அது பொதுவாகச் சமுதாயத்தின் களைப்பையும், சோர்வையும் நீக்கவேண்டிய மருந்து. மனப்புண்ணை நீக்கும் இன்னிசை மக்களிடை வளர்ந்த பல பண்புகளையும் நீக்கும் அருமருந்தாகப் பயன்பட முடியும். மருந்தல்ல - அமுத மென்றாலும் ஒப்புகிறேன். ஆனால் அமுதமானாலும் அள விற்கு மிஞ்சினால் நஞ்சாகும் என்ற உண்மையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். க இங்கே இசை ஒரு கலையென்ற வகையில் அதன் பொதுத்தன்மையை, விளைவைக் கண்டோம். இசையுணர்வு மிகுந்ததாலே தமது (தமிழ்) இசையை மறந்தவரைக் கண் டோம்! தமிழிசை உரிமை பூண்டிருந்த மக்களுடைய மன திலே கூடத் தெலுங்கிசை, குடியேறியதைக் கண்டோம்! தமிழ்ப்பாட்டைவிட தெலுங்குப்பாட்டே இசைக்குப் பொருத்தம் என்று தமது பேரிசை யுணர்வாலே பேசியோ ரைக் கண்டோம்! ஏன் இந்த விளைவு? இசைக்கலையின் உருக்கம் நம் நாட்டிலேயே நமது கலையையும் மொழியையும் மாற்றார் கலைக்கும் மொழிக்கும் மண்டியிடச் செய்தது; தமிழ்க்கலையை மறையச் செய்தது, தமிழ் மக்களை மாண் பிழக்கச் செய்தது. தமிழகத்தைப் பொருத்தவரையில், கண் மூடிய கலைக்கா தல், இந்த நிலைக்குக் காரணமாயிற்று. கலையும், இந்த நிலைக்குள்ளாயிற்று. நாளடைவில் தமிழ்க்கலை, தாழ் வடைந்து விட்டது மட்டுமன்றி அழியவும் தலைப்பட்டது இனி கலையென்றால் என்ன என்று காணவேண்டியிருக் கின்றது. கலையை உணர்வதுகூட வதுகூட கடினமல்ல, கலையை