உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கும் பற்பல மாறுபாடு உண்டு. கீழ் நாட்டுக்கும் மேல் நாட் டுக்குமே அடிப்படையிலேயே வாழ்க்கை முறையில் பற்பல மாற்றம் உண்டு. து அதைப் போலவே அந்தந்த நாட்டுக் கலைகளிலும் அங் கங்கே காணப்படும் காட்சிகளும் நிகழ்ச்சிகளுமே இருப்பது தான் இயலபு. தமிழ்ப் பாடல்களிலே குளிர்ந்த தென்றல் வீசும்; வேதங்களிலே சுடும் அக்கினி வளர்க்கப்படும். அராபி யக் கலையிலே ஒட்டகத்தைப் பற்றிய பேச்சிருக்கும்; எகிப்து நாட்டிலே பிரமிட் பெருமை இருக்கும். இத்தாலிய நாட்டுக் கலையிலே ரோமாபுரி இராணிகளின் லீலா வினோதம் இருக் கும். ஆங்கிலக் கலையிலே கடற்படையின் பெருமை இருக் கும். அதற்கு மாறாக அராபியக் கலையிலே தென்றலைக் காண முடியாது. வேதத்திலே அகப்பொருளும் புறப் பொருளும் பார்க்க இயலாது. சூலு நீக்ரோ நடனத்தைத் தமிழ் இலக் கியத்திலே காண முடியாது. அந்தந்த நாட்டுக்குரிய சிறப்பு அமைப்புக்களே அந்தந்த நாட்டுக் கலையில் இடம பெறுதல் இயல்பு. க வட்டாரத்திற்கோர் கலைமட்டுமல்ல, வர்க்கத்திற்கோர் கலையும் உண்டு. கலை இடத்திற்குத் தகுந்தாற்போல் அமை வதைப் போலத்தான் இனத்திற்குத் தகுந்தாற்போலும் அமையும். பல இனத்தவரின் கலை வளர்ச்சியை நாம் பேல் வாரியாகப் பார்த்தால்கூட இனத்திற்கு இனம் வெவ்வேறு தன்மையோடும் நோக்கத்தோடும் விளைவோடும் கலை அமைந் திருப்பதைக் காணலாம். அந்தந்த இனப்பண்பு அந்தந்த இனக் கலையிலே தெளிவாக உணரப்படும். ஒவ்வோர் இனத் தின் வீரமும், தீரமூம், கருத்தும் செயலும், எண்ணமும் எழுச்சியும், அந்தந்த இன இலக்கியங்களிலே காணப்படும். சங்க இலக்கியங்களிலே திராவிட இனத்தின் வீரத்திற்கும் பெருமிதத்திற்கும் பேரெழுச்சிக்கும் புறப்பாடல்களும், மனப் பண்பிற்கும் செம்மைக்கும் காதல் வாழ்க்கைக்கும் அகப்பாடல்களும் எடுத்துக் காட்டுகளாய் விளங்குகின்றன. ஆ ஆரியருடைய - - எதிரியை அழிக்கும் எண்ணத்திற்கும், சாதித் தத்துவத்திற்கும் அவர்களுடைய வேதங்களும் இதி