38 மண் ணுக்கும் பொன்னுக்கும் 4 உவமிக்கப்படுவானேன். உணர்ச்சியும் உணர உள்ளமும் இல்லா த காரணத்தால் மண்ணுக்கும், பொன்னுக்கும், மனிதனிடத்தில் ஆசை தோன்றமுடியாது. ஆனால் பெண்ணுக்கு மப்படியா? ஆணுக்கு மட்டுந்தான் ஆசை தோன்றுமா? அப்படியானால், மண்ணாசையும் பொன்னாசையும்போல, பெண்ணாசையுடன் ஆணாசை யென்ற ஒன்றினையும் சேர்க்க வேண்டாமா என்று எண்ணிப் பாருங்கள். ற கல்லானாலும், புல்லானாலும் கணவன், என்றே கொள்ள வேண்டு மென்பது நீதிதானா? இருபதாவது நூற்றாண்டில், இந்தக் கருத்துடைய கலை எட்டில் இடம் பெற்றாலும், நாட் டில் இடம்பெற இயலுமா? இதைத் தான், காலத்தின் கவி, கூறுகிறார், பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே என்று. இவற்றைக் கருதியே கலையிலே ஓர் புரட்சி அவசி யம் என்று நாங்கள் கூறுகிறோம். இந்தக் கலைகளைப்பற்றிய ஓர் உயர்ந்த உண்மையை, மராட்டியக் கலைஞர், காண்டேகார் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார். "யானைகளைப் பிடிப்பதற்காகத் தோண்டிய குழிகளை அழகிய பசுமையினால் மறைத்துவைப்பது வழக்கம். அப் படித்தான் சமூகமும், வாழ்க்கைப் பாதையிலுள்ள மேடு பள்ளங்களை, மோகனமான காவியங்களென்ன மயக்குந் தத் துவ ஞானங்களென்ன, இவற்றின் மறைவில் ஒளித்துவைத் துத் தன் சந்ததிகளையே பலிவாங்குகிறது. காதலிலிருந்து, மதம் வரையில் கலைமகள் முதல் திருமகள் வரையில், வாழ்க்கையைக் காப்பாற்றும் உண்மைகள் யாவும், முடைய அறிவற்ற ஆராய்ச்சியற்ற தன்மையால் திரிந்து போயுள்ளன. அவற்றில் படர்ந்துள்ள விஷத்தினால் இளை நம்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/44
Appearance