40 கருதமுடியாது. அன்றி அவ்வாறு கருதுகின்ற சமுதாயம் நன்றாக வாழ முடியாது. ر, ' சமு ரஷ்ய நாட்டுக் கலைஞர், மாக்ஸிம் கார்க்கி ஒரு சமயம் "கலைக்கு உரிமை தேவையில்லை, கலைஞர் அரசியலுக்குக் கட் டுப்பட்டே கலை வளர்ச்சியில் கருத்தூன்ற வேண்டும் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே, அங்கே 'அரசியல் தாயத்தைத் தான் குறிக்கிறது. மக்கள் நலத்தை நாடுவதே அந்த அரசியல். மக்கள் வாழ்க்கை உயரவேண்டும் என்ற எண்ணத்தோடே கலை வளர்ச்சியில் கருத்தூன்ற வேண்டும் என்றே அவர் கூறுகிறார். கலைக்கு உரிமை தேவையின்று என்று கூறியது, இந்த சமுதாய வளர்ச்சி நோக்கத்தைத் தவிர பிற நோக்கத்திற்குக் கலையில் இடமிருக்கத் தேவை யில்லை என்ற எண்ணத்தினாலே யாம். சமூக வளர்ச்சி நோக் கமே, அங்கே அரசியல் கட்டுப்பாட்டிற்கு இயைந்து கலை வளர்க்க வேண்டும் என்பதில் பெறப்படுவதாம், பேரறிஞர் பர்னார்ட்ஷா அவர்கள், கலையைப்பற்றி கலை வாழ்க்கை நோக்கம் உடையதாகவும், அறிவுபுகட்டுவதாகவும் இருக்க வேண்டும்" என்றும், கலை வாழ்க்கைக்காகவே என் றும் கூறியுள்ளார். (Art should be purposeful and did- actic. Art for life's sake) மக்கள் வாழ்க்கையில் மேன் மையுறவே கலை பயன்பட வேண்டும் என்பதும், மக்களுள் ளங்களில், உயர்ந்த நோக்கம் பதிய கலை நோக்கமிருக்கவேண் டும் என்பதும், கலை வாழ்க்கைக்காகவே என்பதினின்று தெளிவாக விளங்குகின்றன. ஏகலைவன் என்ற வேடன் கதையை நீங்கள், கேட் டிருப்பீர்கள். ஏகலைவன், வில்வித்தைப் பயிலுவதற்குத் துரோணாச்சாரியாரை நெருங்கிப் பயிற்றுவிக்கக் கேட்டான். அவர் மறுத்துவிட்டார், வேடன் சாதியிலே தாழ்ந்தவனான தால். ஆனால் ஏகலைவன், துரோணாசாரியாரைப்போல ஓர் ஓ உருவத்தைச் செய்துவைத்து அதன் முன்னிலையில் வில் வித்தை பழகித் தேர்ந்தவனானான். அவன் மிகச் சிறந்த வில்லாளி ஆகிவிட்டதை அறிந்த துரோணாசாரியார், அவ
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/46
Appearance