பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

105


குலோத் :- இதில் நகைப்புக்கென்ன இரு க் கி ற து? குற்றவாளிகளைத் தண்டிப்பதும் விடுவிப்பதும் இயற்கை தான்ே?

(உதயணர் வருகிறார்.)

உதயணர்: அரசே! வணக்கம்!

குலோத்:- யார்! உதயணரா! என்ன! இவ்வளவு சீக்கிரம்

வந்துவிட்டீர்கள்! ஏன் புலவர் வரவில்லையா?

உதயணர்:- ஆம்; அதோ சிவிகையில் வருகிறார். சீக்கிரம் வரவேண்டுமென்றே குதிரையில் சென்று வந்தேன்.

கூத்தர்!- ஆஹா புகழேந்தியின் விடுதலையில் உதயணருக்கு எவ்வளவு அக்கரை? காரியம் வெகு விரைவிலல்லவா நடைபெறுகிறது.

உதயணர்:- புகழேந்திப் புலவரின் விடுதலையில் எனக்கு மட்டுமல்ல, இந்நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கரையுண்டு. ஆனால், காரியம் விரைவில் நடை பெறுவதற்குக் காரணம் அதுவல்ல. மகாராணியின் கோபம் தணிந்து மன்னரின் மனமும் மகிழ்ச்சியடைய வேண்டு மென்பதுதான்்.

(சிவிகை வரும் சப்தம் கேட்கிறது.) அதோ அவரும் வந்துவிட்டர். கூத்தர்:- (தனக்குள்) ஆம்; அதோ வந்துவிட்டார் கல்விக்

கடல்; புலவர் சிகாமணி (கேலிச்சிரிப்பு.)

(புகழேந்தி வருகிறார்.) குலோத்:- வருக! வருக! புலவர் பெருமானே! நடந்தவற்றை எண்ணி வருந்தாது மன்னிக்கவேண்டும். இனி...... s

(வணங்குகிறான்.)