பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

135


வெட்கம். வெட்கம். (புகழேந்தியைப் பார்த்து) புலவரே நான் வேண்டியபடி மதிமூன்று வர தாங்கள் ஒரு செய்யுள் சொல்லுங்கள்.

புகழேந்தி:- (வணங்கி) பாடுகிறேன்; அம்மையே.

(விருத்தப்பா) "பங்கப் பழனத் துழுமுழவர்

பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர்

தனைக்கொண் டெறியுங் தமிழ்நாடா கொங்கர்க் கமரா பதியளித்த

கோவே இராசகுலத்திலகா வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு

மெலிந்த பிறைக்கும் விழிவேலே'

ஒளவை:- ஆஹா பாட்டென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? புலவரே! மிக்க மகிழ்ச்சி! கூத்தரே, புகழேந்தி யின் பெருமைறியாது அவருக்கு எத்தனைதீங்கிழைத்தீர். அகங்காரப் பேயையும், பொறாமைத் தீயையும் வளர்த்து, தன்னைத்தான்ே அவைகளுக்குப் பலியிட்டுக் கொள்வது மதியீனமல்லவா? வேண்டாம். இனியேனும் உம்போன்ற புலவர்களை மதித்து அவர்களிடம் அசூயையும் பொறாமையும் கொள்ளா திருப்பதே புலவர்களுக் கழகு. வேந்தே, இந்த நிகழ்ச்சி தங்களுக்கு வருத்தத்தையே உண்டாக்கி இருக்கும். என்றாலும் கூத்தரின் நன்மையைக் கோரியும் புகழேந்தியின் திறமையைத் தாங்களும் உணர வேண்டும் என்று நினைத்துமே இப்படி செய்தேன். மன்னிக்கவேண்டும்.

குலோத்து: அம்மையே! எனக்கொன்றும் வருத்தமில்லை. மக்கள் அனைவருக்கும் தாங்கள் தாய் போன்ற

வர்கள். குழந்தைகள் குற்றத்தைத் திருத்துவது