பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-30

இடம்:கூத்தரின் வீடு. காலம்:-இரவு.

(புகழேந்தி ஒரு பெரும் பாறாங்கல்லைச் சுமந்தபடி இருளில் மறைந்து மறைந்து, மெள்ள வருகிறார்.)

புகழேந்தி:- (மெதுவாகத் தனக்குள்) இதுதான்் கூத்தரின் இல்லம். வீட்டில் விளக்கெரிகிறது. ஆனால், நிசப்தமா யிருக்கிறது. கூத்தர் இனிமேல் தான்் வருவார். வரட்டும். இன்றுடன் அவர் ஆயுள் முடிந்துவிடும். இந்தப் பாறாங்கல் தான்்!......இல்லை. அவர் அகம்பாவம் தான்் அவருக்கு எமன்.

(யாருக்கும் தெரியாத ஒரு மறைவான இடத்தில் மறைந்து நிற்கிறார். கூத்தரும் தளர்ந்த நடை யுடன் முணுமுணுத்துக்கொண்டே வந்து திண்ணை யில் அமருகிறார்.)

கூத்தர்:- (தமக்குள்) என்னே! புகழேந்தியின் புலமைத்திறன்! ஆஹா! நினைத்தாலும் நெஞ்சம் புளகமடையும் கற்பனையும் பொருட்செறிவும் சொல்லமைப்பின் அழகும் என் உள்ளத்தையே கொள்ளை கொள் கின்றதே! ஆஹாஹா!!

(உணர்ச்சி மிகுதியில் தம்மை மறந்து பாடுகிறார்).

க-10